செந்தில் பாலாஜியின் ஜாமின்? இன்று மீண்டும் விசாரணை!

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.  

 

1 /5

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.   

2 /5

இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு  கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கையு செய்யப்பட்டு 200 நாள்கள் கடந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியிருந்தார்.  

3 /5

மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார்.  

4 /5

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.  

5 /5

இதற்கிடையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருப்பது, இன்றைய விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.