கும்பத்தில் சூரியனின் உச்ச பெயர்ச்சி, அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகளுக்கு சுபிட்சம், பண வரவு

Sun Transit 2024: நாளை முதல் தொடங்கி அடுத்த 30 நாட்களுக்கு சூரிய பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணிக்கப் போகிறார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு சுப பலன் என்பதை  தெரிந்து கொள்வோம்.

சூரியப் பெயர்ச்சி 2024: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் நேற்று சனியின் ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். சூரிய பகவான் நேற்று மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சி செவ்வாய்கிழமை மதியம் 03:54 மணிக்கு ஏற்பட்டது. பிப்ரவரி 13 முதல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி சூரியன் மீன ராசிக்கு மாறுவார். எனவே வரவிருக்கும் அடுத்த 30 நாட்கள் எந்த ராசிகளுக்கு சுப பலன் கிடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /7

மேஷம்: மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். அலுவலகத்தில் பாராட்டுகலைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளைப் பெறலாம். நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.

2 /7

ரிஷபம்: சனியின் ராசியில் சூரிய பெயர்ச்சி, ரிஷபம் ராசியினருக்கு நன்மை தரும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறலாம்.

3 /7

மிதுனம்: அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறுவீர்கள். வேலைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மதப் பயணம் மேற்கொள்ளாம்.

4 /7

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியால் அற்புதமான இடத்தில் இருந்து வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அரசாங்க வேலை வாஉப்பு பெறலாம். நிதி நிலை வலுவாக இருக்கும்.

5 /7

தனுசு: சனியின் ராசியில் சூரிய பெயர்ச்சி அடைந்துள்ளது தனுசு ராசியினரின் தைரியம் அதிகரிக்கும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மதப் பயணங்களுக்கு செல்லலாம். தந்தையின் ஆதரவை பெறுவீர்கள்.

6 /7

மகரம்: எதிர்பாராத புகழை பெறுவீர்கள். முதலீட்டால் லாபம் பெருகும், இதனால் பண வரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். சம்பள உயர்வு, ப்ரமோஷன் போன்ற செய்திகளைப் பெறலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.