நடிகர் பகத் பாசிலின் 'ஆவேசம்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

Fahadh Faasil Aavesham to stream on Prime Video: பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆவேசம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2024, 10:38 AM IST
  • ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'ஆவேசம்'
  • பிரைம் வீடியோவில் OTT பிரீமியர் காட்சிக்கு தயாராகி வருகிறது
  • பகத் பாசில் நடிக்கும் இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.
நடிகர் பகத் பாசிலின் 'ஆவேசம்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு title=

Fahadh Faasil Aavesham to stream on Prime Video: சமீப சில மாதங்களாக, மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் சில திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் வரிசையில் தற்போது சமீபத்தில் வெளியான திரைப்படம் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியானது. இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல தரமான வரவேற்பு பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் 130 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது ஆவேசம். இதில், ரோஷன் ஷானவாஸ், மிதுன் ஜெய், ஷாஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

பகத் பாசில் ஹீரோவாக நடித்து 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் இதுவாகும். இந்த படம் கேரளா மாநிலத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் அமர்க்களமான ஹிட் அடித்தது ஆவேசம் திரைப்படம். ‘கண்களாலேயே வில்லத்தனத்தை காட்டுபவர்’ என்ற பெயரை பெற்ற பகத், இந்த படத்தில் தனது ஜாலி கலந்த வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். ஆக்‌ஷன் காமெடி வகையில் உருவான இந்த படத்தில், ஹீரோயினே இல்லை. இதுவும், இந்த படத்தில் பாராட்டுதலுக்குரிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது. 

மேலும் படிக்க | Bison Kaalamaadan Movie: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

கேங்ஸ்டர் படமாக உருவாகியிந்த ஆவேசம் படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். முக்கியமாக ஃபகத்தின் நடிப்பு வழக்கம்போல் அசத்தலாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது ஆவேசம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே 9 ஆம் தேதி இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் படத்துக்கு ரசிகர்கள் செம வரவேற்பை கொடுத்தனர். இதன் காரணமாக ஓடிடியிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவை படத்துக்கு கொடுப்பார்கள் என்று ஃபகத் பாசில் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | Latest News Samantha Ruth Prabhu Instagram Story : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா!? ரசிகர்கள் அதிர்ச்சி.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News