MI vs KKR 2024 : கொல்கத்தா, மும்பை போட்டியில் வெல்லப்போவது யார்? தெரிஞ்சுக்கோங்க

MI vs KKR 2024, IPL Match Today Playing XI prediction : கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று வான்கடே மைதானத்தில் மோத இருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2024, 12:04 PM IST
  • மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா இன்று மோதல்
  • கொல்கத்தா மீது ஆதிக்கம் செலுத்தும் மும்பை
  • இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்
MI vs KKR 2024 :  கொல்கத்தா, மும்பை போட்டியில் வெல்லப்போவது யார்? தெரிஞ்சுக்கோங்க title=

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கின்றன. இப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிடும். அதேநேரத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு என்பது ஏறக்குறைய முடிந்துவிட்டது என சொல்லலாம். 

கொல்கத்தா - மும்பை நேருக்கு நேர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் இதுவரை நேருக்கு நேர் 32 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 10 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன. அதில் 9 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஒரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வென்றுள்ளது. 

மேலும் படிக்க | Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்

வான்கடே மைதானம் பிட்ச் ரிப்போர்ட்

வான்கடே மைதானத்தில் பவுன்ஸ் நன்கு இருக்கும். இதனால் பேட்டிங்கிற்கு ஏதுவாக பிட்ச் இருக்கும். முதல் பேட்டிங்கில் வேகம் மற்றும் கொஞ்சம் ஸ்விங்க் இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இரு அணிகளும் ரன்மழை பொழியவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால், இரண்டாவது பேட்டிங் ஆடும் அணிக்கு வெற்றி கொஞ்சம் சாதகமாக இருக்கும். முதல் பேட்டிங்கில் இமலாய ரன்களை இலக்காக நிர்ணயித்தால் முதல் பேட்டிங் அணியும் வெற்றி பெறலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணிகள் :

மும்பை இந்தியன்ஸ் உத்தேச XI: இஷான் கிஷன் (WK), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, இம்பாக்ட் பிளேயர் : நுவன் துஷாரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச XI: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, இம்பாக்ட் பிளேயர்: அனுகுல் ராய்

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News