Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Latest News Prabhas Marriage : தெலுங்கு நடிகர் பிரபாஸ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு ஸ்பெஷலான ஒரு நபர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : May 17, 2024, 12:12 PM IST
  • பிரபாஸிற்கு திருமணமா?
  • சூசகமான இன்ஸ்டா பதிவு!
  • ரசிகர்கள் குழப்பம்..
Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு! title=

Latest News Prabhas Marriage :  தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இந்தியாவின் மதிக்கத்தக்க-பணக்கார நடிகர்களுள் ஒருவராக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் புதிதாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, இவரது திருமணம் குறித்த சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் கிளப்பிவிட்டிருக்கிறது. 

திருமணமா?

நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் வந்த போது அவர் அது எதற்குமே செவி சாய்த்ததில்லை. இந்த நிலையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். 

Prabhas

இதில் அவர், தன் வாழ்க்கையில் புதிதாக ஒருவர் நுழைய இருப்பதாகவும், கொஞ்சம் காத்திருக்குமாறும் கேட்டுக்க்கொண்டுள்ளார். இது, அவர் திருமணம் குறித்த அறிவிப்பாக இருக்குமோ என பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதுவாக இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன்தான் உண்மை தெரிய வரும். 

மணப்பெண் இவரா?

நடிகர் பிரபாஸும் அனுஷ்கா ஷெட்டியும் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாக அவர்களின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்த இவர்கள், அந்த சமயத்தில் காதலித்ததாகவும், இந்த உறவை வெளி உலகிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு இவர்கள் வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இதனால், இவர்கள் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூட தகவல்கல் வெளியானது. தற்போது திருமண சந்தேகங்களை கிளப்பும் வகையில் இவர் வெளியிட்டிருக்கும் பதிவு, ஒரு வேளை அனுஷ்காவுக்கும் இவருக்குமான திருமணம் குறித்ததாக இருக்குமோ என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தொடர் தோல்வி படங்கள்:

நடிகர் பிரபாஸை தெலுங்கு திரையுலகில் பலர் Rebel Star என்று அழைப்பர். தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து இந்த பெயரை வாங்கிய அவர், இருப்பதிலேயே அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராக இருந்தார். ஆனால், பாகுபலி படத்திற்கு பிறகுதான் இவரது மார்கெட் ஒரே அடியாக உயர்ந்தது. பாகுபலி 1 மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் இரண்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது. 500 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படங்களில்தான் பிரபாஸ் சைன் செய்தார். ஆனால், பாகுபலி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியை தழுவின. குறிப்பாக, கடந்த ஆண்டு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதி புருஷ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பலரிடம் வசைபாடல்களையும் வாங்கினார். இதையடுத்து, இவரது சலார் படம் வெளியானது. இது தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் ஹிட் அடித்தது. 

Kalki 2898 AD:

பிரபாஸ் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இந்த படம், வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | லண்டன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபாஸ்! இவ்வளவு பெரிய ஸ்டாருக்கு இப்படியொரு நிலைமையா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News