HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா?

Happy Birthday Trisha Krishnan: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 4, 2024, 10:48 AM IST
  • கோடீஸ்வர கோலிவுட் குயின் த்ரிஷா.
  • நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள்.
  • கில்லி ரீ ரிலீஸில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா? title=

Happy Birthday Trisha Krishnan,Net Worth: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார். அவரது தீவிர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகி வருகிறது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

நடிகை த்ரிஷா:
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளவர் நடிகர் த்ரிஷா. இவர் முதல் முதலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயாக அறிமுகமார். இதே ஆண்டில் பல ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். அதுவும் 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் ஒரே கதாநாயகி நடிகர் த்ரிஷா ஆவார்.

த்ரிஷா - விஜய்:
இதனிடையே 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக த்ரிஷாவுடன் இணைந்து நடித்தார் விஜய். அதன்பிறகு இவர்கள் இருவரும் திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்தனர். இதன் மூலம் இவர்களின் கெமிஸ்ட்ரி திரைப்படகளில் நன்கு ஹிட்டானது. அண்மையில் இவர்கள் இருவரும் நடித்த லியோ படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவர்களின் கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியது.

கில்லி ரீ- ரிலீஸ் மூலம் மீண்டும் கலக்கம்:
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கில்லி படத்தை ரீ- ரிலீஸ் செய்தது, படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் வாரத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. இதன் மூலம் இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை கில்லி படைத்தது.

த்ரிஷா - அஜித்:
விஜய் த்ரிஷா ஹிட் ஜோடியை அடுத்து கோலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட ஜோடி த்ரிஷா அஜித். அஜித், த்ரிஷா இணைந்து ஜீ, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரின் காம்போ ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ’விடாமுயற்சி’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்

டாப் ஹீரோக்களுடன் த்ரிஷா:
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நடிகர் த்ரிஷாவின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. அதுவும் தொடர்ந்து டாப் ஹீரோகளுக்கு ஜோடியாக இவர் கமிட்டாகி வருகிறார். அதன் படி விஜய், அஜித்தை தொடர்ந்து இவர், கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ படத்திலும், மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ படத்திலும், நிவின்பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ படத்திலும், நடிகர் சிரஞ்சீவியுடனும் நடிக்கிறார்.

த்ரிஷாவின் சொத்து மதிப்பு விவரம்:
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு விவரம் வைரலாகி வருகிறது. அதன்படி இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நடிகை த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதே போல் இவர் விளம்பர படங்கள் மூலம் வருடத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம். மேலும் ரூ. 7 கோடி மதிப்பில் சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது. மேலும் ஹைதராபாத்தில் த்ரிஷாவிற்கு ரூ. 6 கோடி மதிப்பில் பெரிய பங்களா ஒன்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இவரிடம் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் உள்ளது.

மேலும் படிக்க | Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News