Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை...

Norovirus Impact : பல்வேறு நோரோவைரஸ் விகாரங்கள் இருப்பதால் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை நோரோவைரஸால் பாதிக்கப்படலாம் என்று CDC எச்சரிக்கிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2024, 01:20 PM IST
  • அமெரிக்காவில் நோரோவைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்வு
  • பல்வேறு நோரோவைரஸ் விகாரங்கள்
  • பல முறை நோரோவைரஸால் பாதிக்கப்படலாம்
Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை... title=

நோரோவைரஸ் உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதன் விளைவாக திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். அமெரிக்காவில் 'நோரோவைரஸ்' எனப்படும் ஒரு புதிய வைரஸ் வேகம் எடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் நோரோவைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனைகளில் கடந்த மூன்று  வாரங்களில் 13.9 சதவீதத்தினருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பல்வேறு நோரோவைரஸ் விகாரங்கள் இருப்பதால் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்படலாம் என்று CDC கூறியதை மேற்கோள் காட்டி, The Hill பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  "ஒரு வகை நோரோவைரஸ் மற்ற வகைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்காது" என்று சிடிசி குறிப்பிட்டுள்ளது.  

மேலும் படிக்க | அடிவயிற்று கொழுப்பை உடனே குறைக்கணுமா? தினசரி இத மட்டும் பண்ணுங்க போதும்!

அமெரிக்காவில் வருடத்திற்கு சுமார் 19 முதல் 21 மில்லியன் நோய்களுக்கு காரணமாகும் நோரோவைரஸ், பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோரோவைரஸுடன் தொடர்புடைய சுமார் 900 இறப்புகள் ஆண்டுதோறும் பதிவாகின்றன. இந்த வைரஸின் முதன்மை இலக்கு முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

நோரோவைரஸ் அடிப்படை தகவல்கள்

நோரோவைரஸ் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நோரோவைரஸ் உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதன் விளைவாக திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த வைரஸ் தொற்றுகளை அதிக அளவில் ஏற்படுத்துகிறது.

நோரோவைரஸ் பரவல்

அசுத்தமான நீர், உணவு மற்றும் இடங்களில் நோரோவைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு கடுமையான வயிற்று நோயை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க, நிச்சயம் உதவும்

நோரோவைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் 

குமட்டல்
வாந்தி
வயிற்றுப்போக்கு
வயிற்றுப் பிடிப்புகள்
குறைந்த தர காய்ச்சல்: உடல் வெப்பநிலையில் லேசான அதிகரிப்பு.
தலைவலி
உடல் வலி மற்றும் சோர்வு

என நோரோவைரஸ் தொடர்பான பொதுவான அறிகுறிகள், வைரஸ் பாதித்த 12 முதல் 48 மணி நேரத்திற்குள் தோன்றும். இந்த அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை நீடிக்கும்.  

நோரோவைரஸ் என்பது சாதாரணமான வைரஸாக இருக்கும் நிலையில், பல்வேறு வைரஸ் விகாரங்கள் இருப்பதால் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுவது கவலைகளை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News