இந்தியர்களின் பங்களிப்பை மதிக்கும் அமெரிக்கா! அக்டோபர்: இந்து பாரம்பரிய மாதம்

Hindu Heritage Month: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அக்டோபர் மாதத்தை ‘இந்து பாரம்பரிய மாதமாக’ அறிவித்தது; வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி (CoHNA) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 1, 2023, 07:16 AM IST
  • வட அமெரிக்காவில் இந்துக்களுக்கு மகுடம்
  • இந்தியர்களின் உழைப்புக்கு மரியாதை தரும் ஜார்ஜியா
  • இனி அக்டோபர் மாதம், இந்து பாரம்பரிய மாதம் என்று அறியப்படும்
இந்தியர்களின் பங்களிப்பை மதிக்கும் அமெரிக்கா! அக்டோபர்: இந்து பாரம்பரிய மாதம் title=

ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் முன்னேற்றத்தில் 'துடிப்பான' 'இந்து அமெரிக்கன்' சமூகத்தின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக, அக்டோபர் மாதம் 'இந்து பாரம்பரிய மாதமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரகடனத்தை வெளியிட்ட ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியாவில் வேரூன்றிய பல்வேறு ஆன்மீக மரபுகளை மையமாக வைத்து அக்டோபர் மாதம் கூட்டாக கொண்டாடப்படும் என்று கூறினார்.

நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய இந்து பண்டிகைகளைக் கொண்டிருப்பதால், அக்டோபர் மாதம் என்பது இந்து மதத்திற்கு குறிப்பிடத்தக்க மாதமாகும். "இந்து பாரம்பரியம், கலாச்சாரம், மரபுகள் மற்றும் விழுமியங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்க்கையின் பல பிரச்சனைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குகின்றன, மேலும் வழிகாட்டுதலுக்காக இந்து மதத்தின் போதனைகளை எதிர்பார்க்கும் மில்லியன் கணக்கான தனிநபர்களுக்கு உத்வேகம், பிரதிபலிப்பு மற்றும் சிந்தனை ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளன." ஜார்ஜியா ஆளுநரின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
 
உலகளவில் ஒரு பில்லியன் மற்றும் அமெரிக்காவில் சுமார் மூன்று மில்லியனையும் கொண்ட இந்து மதம், உலகின் மூன்றாவது பெரிய மதம் என்று பிரகடனம் மேலும் கூறியது. "துடிப்பான இந்து அமெரிக்க சமூகம், மாகாணத்தின் குடிமக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதன் மூலம் ஜார்ஜியா மாநிலத்திற்க்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது" என்று பிரகடனம் கூறுகிறது.

மேலும் படிக்க | Hindenburg 2.0: OCCRP அறிக்கையினால் சரியும் அதானி குழும பங்குகள்!

மேலும், “அக்டோபர் 2023 இல், ஜார்ஜியா மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமூகம் மற்றும் நமது பெரிய தேசம் முழுவதும் அதன் கலாச்சாரம் மற்றும் இந்தியாவில் வேரூன்றிய பல்வேறு ஆன்மீக மரபுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அதன் பாரம்பரியத்தை கூட்டாக கொண்டாடுவார்கள் என்று ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்து வக்கீல் குழுவான வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி (CoHNA) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது மற்றும் இந்து சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்த ஆளுநர் கெம்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஜார்ஜியா அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்து, அங்கீகரித்தற்கு ஆளுநர் @BrianKempGA அவர்களுக்கு எங்கள் நன்றி. ஜார்ஜியா பிஏசியின் இந்துக்களில் உள்ள எங்கள் நண்பர்களின் அயராத அர்ப்பணிப்பால் இது சாத்தியமானது. அமெரிக்காவின் கலாச்சார சூழலுக்கு இந்து மதம் பெரும் பங்காற்றியுள்ளது. கலிபோர்னியா #SB403 மூலம் எங்களை குறிவைக்கும் அதே நேரத்தில் இந்து அமெரிக்கர்கள் மற்றும் இந்து மதத்தின் பங்களிப்பை ஜார்ஜியா அங்கீகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று X சமூக ஊடகத்தில் இந்து சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜார்ஜியா சட்டமன்றம், "இந்துபோபியா"வைக் கண்டிக்கும் முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது, அதைச் செய்த முதல் அமெரிக்க மாகாணமாக இது அமைந்தது. ஜார்ஜியா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், 'அண்டர்ஸ்டாண்டிங் ஹிந்துபோபியா இனிஷியேட்டிவ்' மேற்கோள் காட்டி, இந்துபோபியாவை "சனாதன தர்மம் (இந்து மதம்) மற்றும் இந்துக்கள் மீதான விரோத, அழிவு மற்றும் இழிவான அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளின் தொகுப்பு, இது தப்பெண்ணம், பயம் அல்லது வெறுப்பாக வெளிப்படும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் 7 கிரகங்கள் சிக்கினால்? கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News