ரூ. 290 கோடி... வாழ்க்கையை மாற்றிய லாட்டரி - 18 வயது சிறுமி வாங்கியதையெல்லாம் பாருங்க!

Canadian Girl Lottery: 18 வயது சிறுமிக்கு 290 கோடி ரூபாய் மதிப்பில் லாட்டரி பரிசுத்தொகை கிடைத்ததை அடுத்து, பென்ஸ் கார்கள், ஜெட் என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2023, 09:47 PM IST
  • அந்த 18 வயது சிறுமி பிறந்தநாள் அன்று லாட்டரி வாங்கியுள்ளார்.
  • அவருக்கு 290 கோடி ரூபாய்க்கு லாட்டரி அடித்துள்ளது.
  • லாட்டரி பரிசுத்தொகையை வைத்து அவர் வாழ்க்கையே மாற்றியுள்ளார்.
ரூ. 290 கோடி... வாழ்க்கையை மாற்றிய லாட்டரி -  18 வயது சிறுமி வாங்கியதையெல்லாம் பாருங்க! title=

Canadian Girl Lottery: ஒரு நபர் திடீரென்று செல்வந்தராக மாறினால், பல விஷயங்கள் மாறக்கூடும். எல்லாவற்றையும் வாங்க முடியாவிட்டாலும், சந்தேகத்திற்கு இடமின்றி பணத்தால் வாங்கக்கூடியவை நிறைய உள்ளன. லாட்டரியை வென்ற பிறகு, ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் இதுவரை கேட்டறிராத ஒரு வாழ்க்கையாக, தனது வாழ்க்கையை தற்போது மாற்றியுள்ளார்.

லாட்டரியை வென்ற ஜூலியட் 18 வயதுதான் ஆகிறது. கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த சிறுமி, தனது பிறந்தநாளுக்கு தனித்துவமான ஒன்றைப் பெறுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட யோசனைக்கு பிறகும், அவரது தாத்தாவின் அறிவுரையின் பேரிலும், அவர் ஒரு லாட்டரி சீட்டைப் பெற முடிவு செய்தார். அது தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் தெரியாது.

மேலும் படிக்க | Kerala Lottery Result: கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ.80 லட்சம்

லாட்டரி டிக்கெட் வாங்கத் தெரியாததால், சிறுமியின் தாத்தா அவருக்கு உதவினார். ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து லொட்டோ 6-49 லாட்டரியை வாங்கிவிட்டு சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஜூலியட் அந்த லாட்டரி டிக்கெட் குறித்து மறந்த போயுள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் தேதி லாட்டரியில் தனது பக்கத்து வீட்டுக்காரர் பரிசு வென்றதை அறிந்ததும், தானும் ஒரு டிக்கெட்டை வாங்கியிருப்பது அப்போதுதான் அவருக்கு நியாபகம் வந்தது. 

அந்தப் பெண் தனக்கு ஏதேனும் பரிசு கிடைத்துள்ளதா என்று பார்ப்பதற்காக அந்த லாட்டரியின் செயலியை திறந்தாள். லாட்டரியில் அவருக்கு இந்திய மதிப்பில் 290 கோடி கிடைத்துள்ளது. ரூ. 290 கோடி சம்பாதித்தது, அவருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி திகைத்துப் போனாள். ஜூலியட் தனது குடும்பத்தாரிடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட பிறகு, தலா ரூ.2 கோடி மதிப்பிலான ஐந்து மெர்சிடிஸ் கார்களை உடனடியாக வாங்கினார்.

கூடுதலாக, அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தை ரூ. 100 கோடிக்கும், லண்டன் வில்லாவுக்கு ரூ. 40 கோடியும் செலவிட்டுள்ளார். மேலும், புத்திசாலித்தனமான பெண் தனது எதிர்காலத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். டாக்டராக ஆசைப்படும் ஜூலியட், தன் தந்தையின் உதவியோடு அந்த பணத்தை நிர்வகித்து வருகிறார். 

மேலும் படிக்க | Kerala Bumper lottery: கேரளா லாட்டரி ரிசல்ட் அறிவிப்பு, முதல் பரிசு ரூ16 கோடி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News