அவசர பணம் தேவைக்கு PF கணக்கில் ஈஸியாக எடுக்கலாம் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

EPFO Online Withdrawal: இனி உங்கள் அவசரத் தேவைக்கும், உடனடித் தேவைக்கும் PF கணக்கில் இருந்தே ஈஸியாக ஆன்லைன் மூலம் பணம் எடுப்பது எப்படி என்பதை இதில் தெளிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 3, 2023, 03:41 PM IST
  • ஓய்வுக்கு பின்தான் PF கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • ஓய்வுக்கு முன்பே ஒருவர் தனது PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
  • நீங்கள் ஆன்லைனிலேயே எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
அவசர பணம் தேவைக்கு PF கணக்கில் ஈஸியாக எடுக்கலாம் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? title=

EPFO Online Withdrawal: வருங்கால வைப்புநிதி (PF) என்பது ஊழியர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தின் ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டமாக கருதப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களுக்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது அல்லது ஓய்வுக்குப் பிறகு அவருக்கு வருவாய் அளிக்கக் கூடியது என்றும் கூறலாம். 

அந்த வகையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளரின் வருங்கால வைப்புநிதி (Provident Fund- PF) கணக்கை நிர்வகிக்கிறது. இதில், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், பணியாளரின் ஊதியம் மட்டுமின்றி பணியாளருக்கு பணி அளிப்பவரும் அதே தொகையை அவரது PF கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. zeenews.india.com/tamil/business-news/epfo-withdrawal-jackpot-news-know-how-and-when-can-employees-withdraw-full-money-from-pf-account-466285

இருப்பினும், PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை ஓய்வு பெற்ற பிறகுதான் திரும்பப் பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, உங்களின் அவசரத் தேவை உள்பட பல காரணங்களுக்காக நீங்கள் அதை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, ஓய்வுக்கு முன்பே ஒருவர் தனது PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். இப்போதெல்லாம், கணக்கில் இருந்து பணம் எடுக்கும் முறை இன்னும் எளிதாகிவிட்டது. எந்தவொரு பணியாளரும் வீட்டிலிருந்தபடியே பணம் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி பணத்தை கணக்கில் இருந்து எடுக்கலாம்.

மேலும் படிக்க | EPFO Online Claim தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறதா? எளிய ஆன்லைன் செயல்முறை இதோ

இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

- EPFO அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in பக்கத்திற்கு செல்லவும். இந்த இணைப்பை கிளிக் செய்தும் நீங்கள் அந்த பக்கத்திற்கு செல்லலாம்.

- உங்கள் UAN எண், கடவுச்சொல் மற்றும் திரையில் காட்டப்படும் Captcha குறியீட்டை சரியாக உள்ளிடவும்.

- இதற்குப் பிறகு Online Service ஆப்ஷனின்  கீழ் உள்ள 'Claim (படிவம்-31, 19, 10C மற்றும் 10D)' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- இங்கிருந்து நீங்கள் ஒரு புதிய டேப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு UAN உடன் இணைக்கப்பட்ட சரியான வங்கி கணக்கு எண்ணை உள்ளீடு 'Verify' என்பதைக் கிளிக் செய்யவும்.

- வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்ட பிறகு, EPFO ஆல் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.

- இதற்குப் பிறகு, 'Proceed For Online Claim' என்பதைக் கிளிக் செய்யவும்.

- அதன்பிறகு, அதில் கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் EPF கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் காரணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு தகுதியுடைய விருப்பங்கள் மட்டுமே உங்களுக்கு காண்பிக்கப்படும்.

- திரும்பப் பெறுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் முழு முகவரியையும், காசோலை அல்லது பாஸ்புக் விவரங்களையும் உள்ளிட வேண்டும், மேலும் 'Advance Claim' ஆப்ஷனை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். அதன் சரிபார்ப்புக்கு, கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கு முன்னர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

- விவரங்களை உறுதிசெய்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் OTP-ஐ கோர வேண்டும், அது உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். OTP-ஐ உள்ளிடும்போது, உங்கள் உரிமைகோரல் சமர்ப்பிக்கப்படும்.

உங்கள் Claim-ஐ பின்தொடரலாம்

உரிமைகோரல் (Claim) சமர்ப்பிக்கப்பட்டதும், அதன் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம். இதற்கு e-seva தளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். EPFO படி, பொதுவாக எந்தவொரு கோரிக்கையையும் தீர்க்க அல்லது PF தொகையை பெற 20 நாட்கள் ஆகும். 20 நாட்களில் உங்கள் பணம் வரவில்லை என்றால், நீங்கள் உங்கள் பிராந்திய PF ஆணையரை தொடர்பு கொள்ளலாம். இது தவிர, அதன் இணையதளத்திலும் புகார் செய்யலாம்.

மேலும் படிக்க | இனி அலையவே வேண்டாம்... ரயிலில் காலி சீட் இருப்பதை எளிமையாக தெரிஞ்சிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News