ஜூன் மாத விற்பனையில் முதல் இடத்தில் வேகன் ஆர்

கடந்த ஜூன் மாதத்தில் விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 7, 2022, 03:10 PM IST
  • ஜூன் மாதம் அதிகம் விற்பனையான கார்கள்
  • வேகன் ஆர் விற்பனையில் அசத்தியுள்ளது
  • மாருதி ஸ்விஃப்ட் காருக்கும் அமோக வரவேற்பு
ஜூன் மாத விற்பனையில் முதல் இடத்தில் வேகன் ஆர் title=

ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 3 கார்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. குறைந்த விலையில் நல்ல மைலேஜ் மற்றும் பல அம்சங்களைக் கொண்டு கார்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கார் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜூன் மாதம் விற்பனை குறித்து வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாருதி வேகன் ஆர் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.  

மாருதி வேகன்ஆர்

ஜூன் மாதத்தில் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது வேகன் ஆர். மார்க்கெட்டில் கடும் போட்டியிருந்தாலும், அதிக விற்பனையை பெற்றுள்ளது இந்த கார். ஹேட்ச்பேக் செக்மெண்டில் இப்போது கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 19,190 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, விற்பனை சரிவடைந்திருக்கிறது.  

மேலும் படிக்க | Cheapest Cars: ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார். அதன் வடிவமைப்பு, மைலேஜ் அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான இரண்டாவது கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜூன் மாதம்  16,213 யூனிட்களை விற்பனை செய்துள்ளது மாருதி சுசூகி ஸ்விஃப்ட். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை சரிந்திருந்தாலும், 2வது இடத்தை பிடித்திருக்கிறது. 

மாருதி சுசூகி பலேனோ

பிரபலமான ஹேட்ச்பேக் காராக இருக்கும் மாருதி சுசூகி பலேனோ, சமீபத்தில் ஒரு புதிய அவதாரத்தில் அறிமுகமானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம் விற்பனையான காராக மாருதி சுசூகியின் பலேனோ இருக்கிறது. மொத்தம் 16,103 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த விற்பனை என்பது அதிகம். புதிய மாடல் அறிமுகமானதில் இருந்து விற்பனையானது 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | Maruti Brezza: முன்பதிவில் அமோக வரவேற்பு - 45,000 பேர் புக்கிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News