வேளாண் சட்டத்தை போல நீட்டை திரும்பப் பெற மாட்டோம்- அண்ணாமலை

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 05:01 PM IST
வேளாண் சட்டத்தை போல நீட்டை திரும்பப் பெற மாட்டோம்- அண்ணாமலை title=

சென்னை தி.நகரில் இன்று காலை தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் வி பி துரை சாமி, சென்னை கோட்டம் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விருப்பமுள்ளவர்வளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. பிறகு  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

வேளாண் சட்டங்களை (Farm Laws) திரும்ப பெற்ற பிரதமர் மோடி (PM Modi) அவர்களின் அறிவிப்பை வரவேற்று மத்திய அரசால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்த நிலையிலும் விவசாயிகளால் அந்த சட்டத்தின் நன்மைகளை புரிந்து கொள்ளாத சூழ்நிலையில் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது ஓராண்டு காலத்துக்கு தொடர் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி அவர்கள் தாமாக முன்வந்து கார்த்திகை தீபம் நாளன்று மக்களிடம் உரையாடியபோது இந்த அறிவிப்பை அறிவித்தார். வருகின்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பிரதமர் தெரிவிதிருப்பதாகவும்.

ALSO READ | ஒன்றும் தெரியாத அண்ணாமலைகள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது:வைகோ காட்டம்

நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களை ஒப்பிட முடியாது என்றும் நீட் தேர்வு (NEET Exam) பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படுத்தியுள்ளது என்றும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் நீட் விஷயத்தை விடாமல் பிடித்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வுக்கு முன்னால் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு அதன் வாயிலாக அரசியல் ஆதாயத்தை தேடும் திமுக அரசு இந்த நாடகத்தை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி இடங்களில் இன்று அந்தந்த மாவட்டங்களில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக விருப்பமனு இன்று பெறப்படுகிறது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக இந்த தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாகவும், தற்போதைய நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்ப மனு பெறுகிறோம் தேர்தல் சமயத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை தலைமை தெரிவிக்கும் என்றார். தமிழகத்தில் அதிக அளவிலான உள்ளாட்சி உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பதை பாஜக தேசிய தலைமை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ALSO READ | மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல் & கடந்து வந்த பாதை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News