நாங்கள் அண்ணாவின் வழி வந்தவர்கள்... தமிழ்நாடு தான் சரி - ஜெயக்குமார் கிளியர்

Governor Tamilnadu Issue : தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் எனவும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2023, 05:42 PM IST
  • கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்.
  • செவிலியர்கள் விவகாரத்தில் திமுக அரசு மீது ஜெயக்குமார் கடும் தாக்கு.
  • 8 வழிச்சாலையில் பச்சோந்தியாக மாறிய திமுக - ஜெயக்குமார்.
நாங்கள் அண்ணாவின் வழி வந்தவர்கள்... தமிழ்நாடு தான் சரி - ஜெயக்குமார் கிளியர்  title=

அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று (ஜன. 6) நடைபெற்றது. 

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,"மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து பண்பாடு இல்லாத மிருகத்தனமான செயல். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை அடையாளம் காட்டியது அதிமுக தான்.  

மேலும் படிக்க | 'தமிழ்நாடு' இணையத்தில் பறக்கும் பதிவுகள்! ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம்

அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் வழி வந்தவர்கள். தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது. கொரோனோ தற்காலிக செவிலியர்கள் மீதான பணிவாய்ப்பு மறுப்பு என்பது திமுக அரசின் தவறான செயல். திமுக அரசு விழா அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளை வற்புறுத்தி 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் குறைவான விலையில் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. எட்டு வழி சாலை திட்டம் ஆட்சிக்கு முன் மற்றும் ஆட்சி அமைத்த பின் வேறுபட்ட பச்சோந்தித்தனமான கருத்துக்களை திமுக தெரிவித்து வருகிறது" என்றார்.

தமிழ்நாடு விவகாரம்

முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என அழைப்பதை விடுத்து தமிழகம் என அழைப்பது சரியாக இருக்கும் என தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு கட்சி மாறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது. அந்த பதிவுகளில் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | இலக்கியத்தை ஊக்குவிக்கும் அரசு - முதலமைச்சர் பெருமிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News