விஜய் அரசியல் பயணம் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியா? 2026 காத்திருக்கும் டிவிஸ்ட்

அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் காண இருப்பதாக அறிவித்துள்ளார். சாதி, மதம், ஊழலுக்கு எதிராக தன்னுடைய அரசியல் பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 2, 2024, 02:36 PM IST
  • அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்
  • 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் காண்கிறார்
  • உதயநிதியின் அரசியல் பயணத்துக்கு போட்டி
விஜய் அரசியல் பயணம் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியா? 2026 காத்திருக்கும் டிவிஸ்ட் title=

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கும் அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், நேரடியாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களம் காணும் என்றும் அறிவித்துள்ளார். ஊழல் மலிந்த அரசியல் கலச்சாரம் ஒருபுறம் என்றால், சாதி, மதங்களைக் கொண்டு பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் மறுபுறம் இருப்பதால் இவை இரண்டையும் எதிர்த்து தன்னுடைய அரசியல் பயணம் இருக்கும் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

அரசியல் பயணத்தில் முதல் அறிக்கையை வெளியிட்டிருக்கும் நடிகர் விஜய், அதில் லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்கும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து பிற்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவ கொள்கை பாதையில் தன்னுடைய அரசியல் பயணம் என கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தன்னுடைய கட்சியின் கொடி, சின்னம், கொள்கை கோட்பாடுகள், கொடி அறிவித்து தன்னுடைய அரசியல் பயணம் மக்கள் சந்திப்புடன் தொடங்கும் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 2024 தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு வர இருக்கும் நிலையில், அதுவரை கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களை அரசியல்மயப்படுத்தும் வேலைகளிலும், கட்சி நிர்வாகத்திலும் முழுமையாக கவனம் செலுத்துவேன் என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார். மிக முக்கியமாக, 2024ல் அதாவது இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என கூறியுள்ளார். இம்முடிவு பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கூடி எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் அவர், அரசியல் மற்றொரு தொழில் அல்ல, புனிதமான மக்கள் பணி என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடித்துவிட்டு, முழுநேர அரசியல் பணியில் ஈடுபட இருப்பதாகவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இவரின் அரசியல் வருகை நேரடியாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்துக்கு எதிர்ப்பாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு திமுக, உதயநிதி ஸ்டாலினை பிரதானப்படுத்தி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என நினைத்திருந்த நேரத்தில் விஜய் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறார். இதனால் விஜய் vs உதயநிதி என 2026 சட்டமன்ற தேர்தல் இருக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

  மேலும் படிக்க |  விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News