தமிழகத்தில் விரைவில் கள் இறக்க அனுமதியா?

கள் இறக்க அனுமதி அளிக்காவிட்டால் எம்.பி. தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 10, 2023, 09:13 AM IST
  • கர்நாடகாவின் வடிகாலாகத்தான் தமிழகம் இதுவரை இருந்து வருகிறது.
  • தமிழகத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
  • கலப்படத்தை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
தமிழகத்தில் விரைவில் கள் இறக்க அனுமதியா?  title=

மயிலாடுதுறையில் தமிழ்நாடுகள் கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்துக்கான காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வுகான முடியாது. தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் தற்போது உள்ள காவிரிநீர் தீர்ப்பு சாத்தியப்படாது அதற்கான புரிதல் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இல்லை. கர்நாடகாவின் வடிகாலாகத்தான் தமிழகம் இதுவரை இருந்து வருகிறது. ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களுக்கான தமிழகத்திற்கு உரிய நீரை கேட்டுப்பெற வேண்டமென்று வலியுறுத்துகின்றனர். அதுபோல் வழங்கினால் இந்த பிரச்னைக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது. காவிரிநீர் தினந்தோறும் பங்கீடு செய்யும் நடைமுறையை அமல்படுத்தினால்தான் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அணைகட்டி அவர்கள் தேக்கிகொள்வதற்கு கர்நாடகாவில் ஒருபோகம் சாகுபடி செய்துவிட்டனர், ஆனால் தமிழகத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. 

மேலும் படிக்க | FICCI FLO நிறுவன விழாவில் ராம்ப் வாக் நடை போட்ட மாற்றுத்திறனாளி பெண்கள்!

பனை, தென்னை கள் இறக்குவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. மதுபானங்கள் குடித்தால் கேடு இல்லையா? கள் குடித்தால் கேடு விளைவதாகவும், அதில் கலப்படும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எந்த உணவுப்பொருளில் கலப்படம் இல்லாமல் இருந்து வருகிறது. கலப்படத்தை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அன்டை மாநிலங்களில் கலப்படங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 48 நாட்கள் ஒருபனை மரத்து கள்ளை அருந்தினால் பல நோய்கள் நீங்கும்; அப்படி ஒரு மரத்தின் கள் கிடைக்காது பலமரத்தில் இருந்துதான் பெறமுடியும். பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து நீராகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்க அனுமதித்து அதனை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் தமிழகத்திற்கு அன்னியவருவாய் கிடைக்கும் தமிழகத்தின் பொருளாதர நிலையும் உயரும். 

கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் 2024 லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை தவிர்க்க விவசாய உற்பத்தி செய்ய வேண்டியதற்கான இலக்கு, புள்ளி விபரங்கள் அரசிடம் இல்லாததால் அதிகமாக உற்பத்தி செய்தால் விலை குறைந்தும், உற்பத்தி குறைந்தால் அதிக விலைக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆதீனங்கள் பல்லக்கில் ஏறி வீதியுலா சென்றால் அவர்களுக்கு மறுபிறவி உண்டு. பல்லக்கில் ஏறாமல் நடந்து வீதியுலா சென்றால் அவர்களுக்கு மறுபிறவி இன்றி மோட்சம் கிடைக்கும். அதனை பல ஆதீனங்கள் அறிவதில்லை என்றார். உடன் காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் மற்றும் பலர் இருந்தனர்.

பனை மர கள்ளின் நன்மைகள்:

பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.  பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பாலை100-200 மி.லி.  அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும் ஆனால்  உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி  கிடைக்கும்.

மேலும் படிக்க | ’அவரு ஒரு மன நோயாளி’ கொடநாடு கொலை வழக்கில் புதிய குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News