கமல் குழப்பத்தில் உள்ளார்: அண்ணாமலை ஓப்பன் டாக்

விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக் பாசில்  நடிப்பதா என கமல் குழம்பத்தில் இருக்கிறார், கமல் சீரியஸான அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2022, 05:30 PM IST
கமல் குழப்பத்தில் உள்ளார்:  அண்ணாமலை ஓப்பன் டாக் title=

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாக சில வீடியோக்களை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தியாகராய நகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியாக ஆளும் கட்சியான திமுக-வினர் சென்னை மற்றும் கோவையில் அராஜகங்களையும் வன்முறைகளையும் செய்துள்ளது. குறிப்பாக கோவை , நெல்லை , திருச்சி , சென்னையில் வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்று கூறினார்.

அதேபோல் சென்னையில் மட்டும் தேர்தலின்போது 40 வாக்குச்சாவடி வரை திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் நடத்திய அராஜகங்களை  மாநில தேர்தல் ஆணையம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்றார் அண்ணாமலை. இவற்றை திசைதிருப்ப மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் குற்றச்சாட்டு கூறியுள்ளனர் என்று தெரிவித்தார் அவர்.

மேலும் சட்டமன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் 14 சதவீதம் குறைந்தற்கு முழுமையான காரணம் ஆளும் கட்சி அட்டூழியம் மட்டுமே என்று சாடினார் அண்ணாமலை. மக்களுக்கு தேர்தல் மீது வெறுப்பை உண்டாக்கி உள்ளது திமுக அரசு என்றும் இதன் காரணமாக நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து உயர் நீதிமன்றத்திற்கு பாஜக சார்பில் மனு அளிக்கபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் எல். முருகனின் வாக்கு எண் வரிசை 1174 ல் அவர் வாக்களிக்கும் முன்பே டிக் செய்துள்ளனர். எனவே டெண்டர்  வாக்கு அளிக்க கோரினர். நாங்கள் முடியாது என்று சொன்னதால் எல்.முருகனை வாக்களிக்க சொன்னர்கள். அவர் வேறொரு வரிசை எண்ணில் வாக்களித்தார் என்றும் விளக்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை.

நாளை இரவு 7 மணி வரை வெற்றிச் சான்றிதழை வழங்க கூடாது என திமுகவினர் கூறியுள்ளனர். 

சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட உள்ளோம். வாக்கு எண்ணிக்கையின்போதே உடனுக்குடன் வெற்றிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.

திமுகவினர் கத்திக் குத்து நடந்தால் மட்டுமே அதை  வன்முறை என்பார்களா..? தேர்தல் நாளில் பல வன்முறை நடந்துள்ளது. ஆனால் தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுவது ஆச்சரியாமாக இருக்கிறது.

மேலும் படிக்க | சட்டையை கழற்றி கேள்வி கேட்ட அமைச்சர் மீது வழக்குப்பதிவு 

குதிரை பேரம் வாக்கு எண்ணும் மையத்திலே தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அராஜகம்  செய்த திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு எங்களது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்போம். 

இசுலாமிய பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது. 'உங்களுக்கு மத நம்பிக்கைதான்  முக்கியம் என்றால் வாக்களிக்கவே வேண்டாம். கடவு சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முகம் காட்ட  அனுமதிக்குப்போது வாக்களிக்கும் போது முக அடையாளம் காட்ட ஹுஜாப்பை அகற்ற கூடாதா ' என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலூரில் பாஜக ஏஜெண்ட்டும் முகம் காட்டத்தான் சென்னார். ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை. வேண்டுமென்றால் சிசிடிவியை தேர்தல் ஆணையம் வெளியிடட்டும் என்றும் அண்ணாமலை கூறினார். 

மேலும் கண்துடைப்பிற்காகவே  இன்று சில வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. அரசியல்வாதி போல் இல்லாமல் காவல்துறை அதிகாரி போல நீங்கள் நடந்து கொள்வதாக சிலர்  குற்றம் சாட்டுகின்றனரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திமுகவிற்கு எதிராக நான் போலிஸ்காரன் போல  இருந்தால்தான் சில விசயங்களை செய்ய முடியும் போல என்றார்.  பழைய அட்ஜஸ்ட்மெண்ட் அரசியல்வாதியாக இருந்தால்  மக்களுக்கு நல்லதல்ல.

அதேபோல் ஜாதி மத அரசியலை பாஜக செய்கிறது என்ற கமலின் கருத்துக்கு பதில் கூறிய அண்ணாமலை, விக்ரம் படத்தில் நடிப்பதா , பிக் பாசில்  நடிப்பதா  என கமல்  குழம்பத்தில் இருக்கிறார். கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுவேன். அவர் மக்களுக்கு என்ன செய்கிறார்? சாதி மத அரசியல் செய்வதாக எதை வைத்து எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் என்று அண்ணாமலை காட்டமாக பேசினார்.

மேலும் படிக்க | ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிரே மொழிதான்! உலகத்தாய்மொழி நாள் வாழ்த்துகள்! - சீமான் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News