இனி தமிழகத்திலும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... அம்மா நகரும் ரேஷன் கடை திட்டம்!!

தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்..!

Last Updated : Sep 21, 2020, 09:15 AM IST
இனி தமிழகத்திலும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... அம்மா நகரும் ரேஷன் கடை திட்டம்!! title=

தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்..!

கடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாய விலை கடைகள் திட்டம் தொடங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3501 நியாயவிலைக் கடை திட்டம் தொடங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், மாவட்டத்தில் 168 கடைகளும் தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலை கடைகள் தொடங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிப்போருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கடைகள் தொடங்கப்படுகிறது.

ALSO READ | இன்று முதல் இந்த மாநிலங்களில் பள்ளி 'மணி' ஒலிக்கும்... பெற்றோர் கவனத்திற்கு!!

இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளார்.

Trending News