பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி மலைகளுக்கும் இலவசமாக பயணிக்கலாம்..!

இனி மலைப்பிரதேசங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். இந்த திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் அமலாகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2024, 09:51 PM IST
  • தமிழ்நாடு அரசின் விடியல் பயணம் விரிவாக்கம்
  • மலைப்பிரதேசங்களுக்கு செல்லும் பேருந்துகளில் இலவசம்
  • பெண்கள் இனி மலை பேருந்துகளிலும் இலவசமாக செல்லலாம்
பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி மலைகளுக்கும் இலவசமாக பயணிக்கலாம்..! title=

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட பெண்களுக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்த திட்டங்களை கோரிக்கைகளுக்கு ஏற்ப விரிவாக்கம் செய்து வருகிறார். அதன்படி, திருநங்கைகளுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி: எந்த சின்னம் தெரியுமா?

அந்தவகையில் மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களும் இனி இலவசமாக பயணிக்கலாம். இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மலைப்பிரதேசங்களில் செல்லும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது. 

அதனைப்போலவே தென் மாவட்டங்களில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு எடுத்துள்ள கணக்கீட்டின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு 201.67 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், “ டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் சுமார் 1,64, 866 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 201.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திமுக பக்கா பிளான் - ராமநாதபுரத்தில் மீண்டும் IUML... வேட்பாளரும் உடனே அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News