17 வயது வித்தியாசம்... திருமணத்துக்கு தடை! அக்கா மகளை கொன்று தாய்மாமாவும் தற்கொலை - பகீர் பின்னணி!

Tamil Nadu Crime News: சொந்த அக்கா மகளை கொலை செய்த தாய் மாமனும் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இதில் முழுமையாக காணலாம். 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Oct 16, 2023, 04:19 PM IST
  • இந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது.
  • போலீசார் பிடிக்கும்போது சரண்ராஜ் உயிருடன் இருந்துள்ளார்.
  • அதன்பின், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
17 வயது வித்தியாசம்... திருமணத்துக்கு தடை! அக்கா மகளை கொன்று தாய்மாமாவும் தற்கொலை - பகீர் பின்னணி!  title=

Tamil Nadu Crime News: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அருந்ததியர் காலனி பகுதியில் வசிப்பவர் பெருமாள் - ஜெயப்பிரதா தம்பதி. இவர்களின் மகள் தான் ஜீவிதா. 18 வயதாகும் இவர் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்துள்ளார். ஜெயப்பிரதாவின் தம்பி தான்  சரண்ராஜ். புகைப்பட கலைஞராகவும் ஓட்டுராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 35 வயதாகிறது. இவர் தனது அக்கா மகளான ஜீவிதாவை காதலித்து வந்துள்ளார். ஜீவிதாவும் இவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஜீவிதாவுக்கு சுமார் 17 வயது வித்தியாசம் உள்ளது.

கொலை வழக்கில் தொடர்பு

இந்நிலையில் ஜீவிதாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி சரண்ராஜ் அவரது அக்காவிடம் கேட்டுள்ளார். ஆனால் சரண்ராஜ் இளம்பெண் ஒருவர் இறந்த வழக்கில் தொடர்புடையவர் என்பதால் தனது மகளை திருமணம் செய்துகொடுக்க முடியாது எனஅக்கா ஜெயப்பிரதா திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

அதோடு இருவருக்கும் இடையே 17 வயது இடைவேளி வேறு தடையாக இருந்துள்ளது. இந்த சூழலில் தான் ஜீவிதா தனது வீட்டில் இருந்த கட்டிலில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜீவிதாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | குழந்தை விற்பனை புரோக்கர்.. பெண் மருத்துவர் கைது!

தற்கொலை கடிதம் சிக்கியது

அதோடு ஜீவிதா வீட்டில் ஒரு கடிதமும் கிடைத்தது. அதில், தனது அக்காவுக்கும், பெற்றோருக்கும் சரண்ராஜ் மற்றும் ஜீவிதா ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஜீவிதாவும், சரண்ராஜூம் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், கல்யாணம் செய்து கொள்ள நினைத்ததாகவும் ஆனால் அது நடக்காமல் போனதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் எழுதியுள்ளனர். கடிதத்தின் முடிவில் சரண்ராஜ் - ஜீவிதா என இருவரின் பெயரும் எழுதி இருந்தது. 

'ஒன்றாக புதையுங்கள் ப்ளீஸ்'

அதோடு சரண்ராஜ் இதனை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார். அதில், எங்களை ஒன்றாக புதையுங்கள் பிளீஸ் என தெரிவித்திருந்தார். இதை எல்லாம் கைப்பற்றிய போலீசார் ஜீவிதாவை கொலை செய்துவிட்டு தப்பியது சரண்ராஜ் என்பதை தெரிந்துகொண்டனர். அதோடு அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில், வெலகல்நத்தம் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் அரை மயக்கத்துடன் சரண்ராஜ் இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது தான் அந்த திடுக்கிடும் உண்மையை அவர் கூறியுள்ளார். 

தற்கொலை எதற்கும் தீர்வாகாது!

அதாவது அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு ஆடிப்போன போலீசார் அவரை உடனடியாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
ஏமாற்றமே மிஞ்சியது 

ஜீவிதாவை கொலை செய்தது ஏன்? இவர்கள் உண்மையில் காதலித்தார்களா? ஒருதலை காதலால் கொலை செய்தாரா? போன்ற கேள்விகளை சரண்ராஜுடம் கேட்க காத்திருந்த போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கா மகளை தாய்மாமனே கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

மேலும் படிக்க | செய்தியாளர் கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த பாஜக எல்.முருகன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News