சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2021, 03:06 PM IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா title=

கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு  (Lockdown) அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10,000 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | E-Pass: தமிழகத்தில் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகள் 74 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது உறுதியாகியுள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகள் 175 பேரில் 74 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் ஒருவர் மூலமாக குழந்தைகளுக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் அந்த பகுதியை பார்வையிட்டு சென்றுள்ளனர். தற்போது அந்த குழந்தைகள் சம்பந்தபட்ட பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவத் துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News