ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை நவம்பர் 29 வரை வெளியிட தடை

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை குறித்த வழக்கின் விசாரணையை நவம்பர் 29 ஆம் தேதி வரை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2019, 12:33 PM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை நவம்பர் 29 வரை வெளியிட தடை title=

புதுடெல்லி: கடந்த 2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்பாவு வழக்கில் கடைசி மூன்று சுற்றுகள் அதாவது 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை எனவும், 203 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. எனவே அந்த வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவாக்கி எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து, மறுவாக்கி எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடியதால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை நவம்பர் 29 ஆம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு சுமார் 69,541 வாக்குகள் பெற்றதாகவும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐ.எஸ். இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 49 வாக்குகள் அதிகம் பெற்ற அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

Trending News