போராட்டம் நடத்துவதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் சாலையில் போரட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 1, 2022, 04:45 PM IST
  • மங்கலம் சாலையில் போரட்டம்
  • போரட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரிய மனு
  • சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
போராட்டம் நடத்துவதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட் title=

திருப்பூரில் இயங்கி வரும் அம்மன் ஜுவல்லர்ஸ் நகை கடை உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மங்கலம் சாலையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், அங்குள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

எனவே மக்கள் நடமாட்டம் நிறைந்த மங்கலம் சாலைக்கு பதிலாக, நொய்யல் ஆற்றங்கரையோர காலியாக உள்ள இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பு சம்பவம் - காவலர்களுக்கு முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ்

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், போரட்டம் நடத்த மனுதாரர் நீதிமன்றத்திடமே அனுமதி கேட்பது போல உள்ளதாகவும், இதற்கு அனுமதியளித்தால் இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறினார். 

மேலும் படிக்க | ஜூஸில் ஆசிட்... காதலனை கொன்ற காதலி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி

மேலும், நொய்யால் ஆற்றங்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் இயற்கை பாதிப்படைய வாய்ப்பிருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | கோவை போலீசாரை பாராட்டி குட்டும் பாஜக அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News