மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு!

Savukku Shankar Latest News: மனரீதியாக, உளவியல் ரீதியாக கோவை சிறையில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு செய்துள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 18, 2024, 07:44 AM IST
  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர்.
  • பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு.
  • தற்போது கோவை சிறையில் உள்ளார்.
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு! title=

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி துணை காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். திருச்சி போலீசார் கைது அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தவறை உணர்ந்துவிட்டேன்... சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் - முழு விவரம் இதோ!

அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர். அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் சவுக்கு சங்கரை 7நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்பட்டார்.

அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் காவல்துறையினர் கஸ்டடிக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலையத்திற்கு  நேற்று அழைத்து சென்றனர். அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை.
ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜானலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.

பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று போலீஸ் காவல் முடிந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின் மீண்டும் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அஜர்படுத்தினர். நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜரான சவுக்கு சங்கரிடம். விசாரணை முறையாக நடத்தப்பட்டதா உங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டது என கேட்டார்? அதற்கு அனைத்தும் வழங்கப்பட்டது விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை என்றார்.

மேலும் கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்படுவதால் மிகுந்த மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும் தனி வார்டு, சென்னை அல்லது திருச்சியில்  வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார். அதனை நீதிபதி மனுவாக வழங்குங்கள் பரிந்துரை செய்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து ஏற்கனவே கோவை நீதிமன்ற உத்தரப்படி 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ளதால் கோவை சிறைக்கு  காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லைசுரேஷ், மாலை 4 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம் கஸ்டடிக்கு எடுத்துச் சென்று ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

3 முறை நீதிமன்ற உத்திரப்படி வழக்கறிஞர்கள் நேரில் சென்று சந்திக்கலாம் என்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கரிடம் விபரங்களை கேட்டு அறிந்தோம், எனக்கு எந்த பிரச்சினை இல்லை என்று அவரை எங்களிடம் தெரிவித்தார். நேற்று 4 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மனரீதியாக உடல் ரீதியாகவோ துன்புறுத்த பட்டதா என சவுக்கு சங்கரிடம் கேட்டால். எந்த துன்புறுத்தலும் இல்லை என்று தெரிவித்தார். கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பிளாக்ல இருந்து வேற பிளாக்கிற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுகோவை சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளார். திருச்சியில் அவர் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளோம். அவர் வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க | குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News