கோடநாடு வழக்கு: சிபிசிஐடி 5 மணி நேரம் ஆய்வு - ரெடியான முக்கிய ரிப்போர்ட் நாளை தாக்கல்

kodanad case: கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலிசார் தலைமையில் விசாரணை குழுவினர் 5 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து நீதிமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 7, 2024, 07:55 PM IST
  • கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி ஆய்வு
  • 5 மணி நேரம் ஆய்வு செய்த போலீஸ்
  • நாளை நீதிமன்றத்தில் தாக்கலாகும் ரிப்போர்ட்
கோடநாடு வழக்கு: சிபிசிஐடி 5 மணி நேரம் ஆய்வு - ரெடியான முக்கிய ரிப்போர்ட் நாளை தாக்கல் title=

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள  கோடநாடு பங்களாவில் 2017 ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 11 பேர் அடங்கிய கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் முக்கிய குற்றவாளி கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான், வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, தீபு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர்.

மேலும் படிக்க | காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

 இந்த வழக்கு கடந்த 6 ஆண்டு காலமாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை கடந்த ஓராண்டாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய விசாரணை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவில் சிபிசிஐடி போலீசார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் இருப்பதாகவும் அக்குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு புதிய மனுவை தாக்கல் செய்தார்.

அதனை ஏற்ற நீதிபதி கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதி தேவை இல்லை என்றும், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலிசார் நிபுணர் குழுவை அழைத்து சென்று ஆய்வு செய்யலாம் என தெரிவித்தார். இதனையடுத்து இன்று சிபிசிஐடி SP மாதன், ADSP முருகவேல், 3 DSP-கள், 3 பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணை குழு கொடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொண்டது. 

குறிப்பாக இக்குழுவினர் கோடநாடு பங்களா, நுழைவாயில் கதவு, காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட இக்குழுவினர் 5 மணி நேரம் கோடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொண்டனர். கோடநாடு எஸ்டேட்  தரப்பில் மேலாளர் நடராஜன், கோடநாடு வழக்கறிஞர் இளந்தமிழ் மற்றும் கோடநாடு VAO சத்தியா ஆகியேரர் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்றைய ஆய்வு குறித்து நாளை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலிசார் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்: நிர்வாகக் குழு அவசரக் கூட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News