பாஜக கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பூ!

பாரதீய ஜனதா கட்சியின் கொடியை குஷ்பூ தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 7, 2022, 03:31 PM IST
  • பாஜகவின் 42வது ஆண்டு துவக்க நாள் விழா
  • தி.நகர் அலுவலகத்தில் கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பூ
  • நிர்வாகிகள் அதிர்ச்சி ; கொடியை இறக்கி மீண்டும் சரியாக ஏற்றிய பாஜகவினர்
பாஜக கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பூ! title=

இன்று பலராலும் அறியப்படும் பாஜக என்கிற பாரதீய ஜனதா கட்சியின் வரலாறு சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது, 1951 ஆம் ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜியால் பாரத ஜன சங்கம் என்ற கட்சியை தோற்றுவித்தார். அன்றைய பிரதமர் நேருடவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தக் கட்சியை பிரசாத் முகர்ஜி தோற்றுவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3 இடங்களைப் பிடித்தது பாரத ஜன சங்கம். இதையடுத்து, 1953 ஆம் ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜீ காலமானார். அவருக்குப் பிறகு கட்சியை தீனதயாள் உபாத்தியாயா கையிலெடுத்தார். 15 ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய தீனதயாள், பல்வேறு மாற்றங்களை கட்சிக்குள் கொண்டுவந்தார். 

மேலும் படிக்க | திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!

அதன்பிறகு, பாரத ஜன சங்க உட்கட்சி பூசல்களால் கலைக்கப்பட்டது. பின்னாளில் 1970ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியான இதே நாளில் அடல் பிகாரி வாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தார். தற்போது பாஜக 42வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் தோற்றுவிக்கப்பட்ட நாளை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ்நாட்டிலும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் அக்கட்சியின் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. அதன்ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் பாஜக அலுவலகத்தில் 42வது ஆண்டு விழா கொண்டாப்பட்டது. இதில் பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினர் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது பாரதீய ஜனதாவின் கொடியை குஷ்பூ தலைகீழாக ஏற்றிய சம்பவம் சலனத்தை ஏற்படுத்தியது. அதில், கொடியில் இருந்த  தாமரையின் இதழ்கள் கீழேயும் , மலர்க்காம்பு மேலேயும் இருக்குமாறு கொடி பறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாஜகவினர், குஷ்பு அங்கிருந்து சென்றவுடன் உடனடியாக கொடியை கீழே இறக்கினர். பின்னர், கொடியை சரிசெய்து மீண்டும் ஏற்றி வைத்தனர். இந்தச் சம்பவம் பாஜகவினர் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News