சென்னை மழை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றசாட்டு!

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வாக்குறுதி அளித்ததும், மழையால் சென்னை மிதந்தது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 13, 2024, 02:25 PM IST
  • அதிமுக ஆட்சிக்காலத்தில் 1400 கிமீ மழை நீர் வடிகால்.
  • சென்னை மிதந்ததும் திமுக ஆட்சியில் தான்.
  • எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றசாட்டு.
சென்னை மழை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றசாட்டு! title=

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என வாக்குறுதி அளித்ததும், சமீபத்தில் பெய்த மழையில் சென்னை மிதந்ததும் திமுக ஆட்சியில் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், வெள்ள பாதிப்பின் போது அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழை வருவதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக ஆய்வு கூட்டங்களும் நடத்தப்பட்டதாகவும், அதிகப்படியான மழை பெய்த போதிலும் மூன்று நாட்களுக்குள் முழுவதுமாக சீர் செய்யப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தவர் முதலமைச்சர் என சுட்டிக்காட்டிய அவர், சென்னையை சிங்கப்பூர் போல் மாற்றி இருப்பதாகவும் கூறினார்

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டதாக கூறினார். மேலும், சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வாக்குறுதி அளித்ததும், சமீபத்தில் பெய்த மழையால் பெரும் வெள்ளத்தில் சென்னை மிதந்ததும் திமுக ஆட்சியில் தான் எனவும் குற்றம்சாட்சினார். அதேபோல், கஜாபுயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான சேதத்தை சரிசெய்ததும், காவேரி பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைத்ததும் அதிமுக எனவும் எதிர்கட்சித்தலைவர் நினைவுக்கூர்ந்தார்.

அப்போது குறுக்கீட்டு பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சராசரியாக மழை பெய்தால் சென்னையில் நிச்சயமாக தண்ணீர் நிற்காது அதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை சீற்றத்தால் தான் தண்ணீர் தேங்கியதாகவும் விளக்கம் அளித்தார்.  தொடர்ந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் பணிகள் எவ்வளவு தூரத்திற்கு முடித்துள்ளீர்கள் என ஆதாரபூர்வமாக எதிர்கட்சி தலைவர் கொடுத்த பின்னர், திமுக அரசை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க - INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்... ராகுல் காந்தி செய்த அந்த காரியம் - நிதிஷ் குமார் தடாலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News