CM MK stalin: உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்

கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2021, 11:47 AM IST
  • கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை
  • கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை
  • செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
CM MK stalin: உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்  title=

சென்னை: கடந்த ஆண்டு முதல் கொரோனா உலகையே புரட்டி போட்டிருக்கிறது. பல கோடி மக்கள் நோயின் பிடியில் சிக்கி மீண்டனர் என்றால், லட்சக்கணக்கானோர் மாண்டனர்.

மிகப் பெரிய சுகாதார பேரிடராக உருவெடுத்திருக்கும் கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பல முன்களப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைவரையும் வீட்டிலேயே இருங்கள் என்று கட்டுப்பாடுகள் விதித்தாலும், நீங்கள் கண்டிப்பாக பணிக்கு வாருங்கள் என்று அனைவரும் கேட்பது மருத்துவ சுகாதாரத் துறைபணியாளர்கள் தான்.
இவர்கள் நேரம் காலமின்றி அனைவருக்காகவும் உழைத்தாலும், நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இவர்களுக்கு ஆபத்தின் அளவு மிகவும் அதிகம்.

Also Read | Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்

இதனை கருத்தில் கொண்டு, கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும்.

கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதில் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Also Read | முன்களப் பணியாற்றும் செவிலியர்களுக்கு International Nurses Day வாழ்த்துக்கள்

மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

ஆதோடு அவர் வேறு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு  பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு.  அதையே தற்போதைய அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்!

மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

என்று தமிழக அரசுக்கு, பாமக சார்பில் வாழ்த்தும், கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Also Read | தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News