செந்தில் பாலாஜி போட்ட புதிய மனு... அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Senthil Balaji Case Update: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 20, 2024, 01:04 PM IST
  • செந்தில் பாலாஜி கடந்தாண்டு கைது செய்யப்ட்டார்.
  • பிப்.12ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி போட்ட புதிய மனு... அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு! title=

Senthil Balaji Case Update: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தொடரப்பட்ட  வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விடுவிக்க கோரி மனு

குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க (Discharge Petition) கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அதிரடி திட்டங்களை வழங்கியுள்ள தமிழக அரசு!

செந்தில்பாலாஜி மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டுள்ளது.

மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V. ஆனந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்தில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கைது செய்யப்பட்ட பின் சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்ததற்கு பல எதிர்ப்புகளும் வந்தன. அவர் சிறை சென்ற உடனேயே அவரது அமைச்சர் பொறுப்பில் நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார். 

22வது முறையாக காவல் நீட்டிப்பு?

இந்த விஷயத்தில் ஆளுநருக்கு அதிகாரமில்லை என தமிழ்நாடு அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது, தொடர்ந்து இலாக்கா இல்லா அமைச்சராகவும் செந்தில் பாலாஜியை தொடர வைத்தார். தொடர்ந்து, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை கூட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீக்க வேண்டும் என வழக்குகள் போடப்பட்டன. அவை தள்ளுபடியும் செய்யப்பட்டன. குறிப்பாக, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் எந்த தார்மீகமும் மீறப்படவில்லை என தெரிவித்திருந்தது. 

இருப்பினும், கடந்த பிப். 12ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். நீதிமன்ற காவலும் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில்,  22ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News