அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

AIADMK VS BJP: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. கூட்டணி குறித்து தேர்தலின் பொது பார்த்துக் கொள்ளலாம். இதுவே அதிமுகவின் நிலை" அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 18, 2023, 04:03 PM IST
  • கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
  • அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழ் தான் வாக்குகள் வாங்குவார்.
  • அதிமுகவுக்கு தேவையில்லாத சுமை பாஜக. இனி கூட்டணி இல்லை -ஜெயக்குமார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை title=

Tamil Nadu Political News: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது, அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், "அண்ணாமலை ஜெயலலிதாவை விமர்சித்ததால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் ஜெயலலிதாவை நான் விமர்சிக்கவில்லை என்று மன்னிப்பு கேட்டார். தற்போது நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடிய அண்ணாவை பற்றி சிறுமைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தோம். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. இதுதான் கட்சித் தலைமையின் முடிவு" என்றார்.
 
எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தாவிட்டால், அதிமுக பதிலடி கொடுக்கும். அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழ் தான் வாக்குகள் வாங்குவார். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க - ADMK vs BJP: இறங்கி அடிக்கும் அண்ணாமலை, குமுறலில் அதிமுக: குழப்பத்தில் எடப்பாடி

பாஜகவுக்குக் காலே இல்லை. பிறகு எப்படி கால் ஊன்றும்? அதிமுகவுக்கு தேவையில்லாத சுமை பாஜக. பாஜக தேவையில்லை என கட்சித் தலைமை முடிவு செய்துவிட்டது என்று பாஜகவை சாடிய ஜெயக்குமார், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தார்.

அண்ணாமலை அரசியலுக்கே தகுதி இல்லாதவர. பாஜக தலைவர் பதவிக்கும் தகுதி இல்லாதவர். அண்ணாவை விமர்சித்த அண்ணாமலையை இனி ஏற்க முடியாது. சிங்கக் கூட்டத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிடுகிறது. அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் அண்ணாமலை மீது தாறுமாறாக விமர்சனங்கள் பறக்கும். அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தால், தேர்தலில் தொண்டர்கள் எப்படி பணியாற்றுவார்கள்? என்று கூறினார்.

மேலும் படிக்க - 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்

பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்து வந்ததால், அதிமுக மற்றும் பாஜக இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா கூறிய பகுத்தறிவுக் கருத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அதற்குப் பின் அண்ணா முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் குறிப்பிட்டார். இதனால் அதிமுக, பாஜக இடையேயான மோதல் பூதாகரமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கக்து.

அண்ணாமலை என்ன பேசினார்?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "ஆட்சியில் இருக்கும்போது யார் யார் என்னென்ன செய்தார்கள்?, எப்படி வசூலில் ஈடுபட்டார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியும். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை, பதவிக்காக பாஜகவினர் யார் காலையும் பிடிக்க மாட்டோம். என்னவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசக்கூடியவன் இந்த அண்ணாமலை. கட்சியில் இருக்கும் ஜூனியர்களை எல்லாம் பேட்டி கொடுக்க சொல்லி ஒருவரை விமர்சிக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேச தயாராக இருக்கிறேன். உங்களுக்கு என்ன பிரச்சனை, நேரா வாங்க பேசலாம்.’ என எடப்பாடி பழனிசாமியையும் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். மேலும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைப்போம், 2026 ஆம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியிருந்தார்.

அதிமுக எடுத்த முடிவு
கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் சி.வி.சண்முகம் ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. இது அதிமுகவுக்கு பெரும் சங்கடத்தையும், குமுறலையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணியை முறித்துக் கொள்வதே சிறந்தது என்ற முடிவு எடுக்கப்பட்டதாவும், அதைத்தான் மூத்த தலைவர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க - திமுகவின் கைக்கூலியாக மாறும் அண்ணாமலை... போட்டுத்தாக்கும் அதிமுகவின் சி.வி.சண்முகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News