முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால்கூட திமுகவினர் விட மாட்டார்கள் - ஜெயக்குமார் விளாசல்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாவனர்கள் திமுகவினர் தான், முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால் கூட அவர்கள் விட மாட்டார்கள் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக விளாசியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 30, 2023, 07:24 PM IST
  • எம்ஜிஆர் படத்தை அழிக்கக்கூடாது
  • அதிமுக கட்சி சும்மா இருக்காது
  • ஜெயக்குமார் கடுமையான விமர்சனம்
முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால்கூட திமுகவினர் விட மாட்டார்கள் - ஜெயக்குமார் விளாசல் title=

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் உருவ படத்தை மறைக்கப்பட்டதை கண்டித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த திமுக அரசு காலை சிற்றுண்டி திடத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான். சென்னையில் 358 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் சத்துணவு திட்டத்தை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் என எழுதுகிறார்கள். உங்கள் படத்தை வைத்துக்கொள்வதில் எங்களுக்கு கவலை இல்லை. 

மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!

ஆனால் ஏன் எங்கள் தலைவரின் படத்தை மறைக்கிறீர்கள்?. காலை உணவு திட்டத்தை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும். 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமில்லை. அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும். எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும். இல்லையெனில் நாங்கள் எழுதி வைக்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள். பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்களுக்கு திமுகவினர் தான். முருங்கை மரத்திற்கு சேலை கட்டினால் கூட திமுகவினர் அதனைவிட மாட்டார்கள். 

திமுக ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, காவல்துறை என யாருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கி, தலைக்குணியும் நிலையில் உள்ளது. கட்சி ஆட்கள் தவறு செய்தால் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல், ஊக்கப்படுத்துகிறார்.  கட்சி ஆட்களை அடக்கி வைக்காததால், அவிழ்த்துவிட்ட மாடுகளைபோல் அனைத்தை மேய்ந்துகொண்டு இருக்கிறார்கள். நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கோடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். எதற்காக குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் எடுக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை கூறுகிறோம்.

தமிழக காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் திமுகவினாலே கொண்டுவரப்பட்டதாகவும், இது கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாகவும் தற்போது இந்த புகாரில் திமுகவினர் சுற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியத்தை உடனே வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | விநாயகர் சிலைகளுக்கு கட்டுபாடு: உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News