IPL Business: ஐபிஎல் அணிகள் எங்கிருந்து எவ்வாறு எப்படி பணம் சம்பாதிக்கிறது?

How IPL Makes Money: உலகளவில் மிகவும் இலாபகரமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உள்ளது, பார்வையாளர்கள் மற்றும் வருவாய் அடிப்படையில் முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு போட்டியாக உள்ளது. ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை குறித்து பார்ப்போம்.  

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 19, 2023, 02:32 PM IST
  • ஐபிஎல் மூலம் அணிகள் வருவாய் ஈட்டுவது எப்படி?
  • ஸ்பான்சர், டிக்கெட் விற்பனையில் கொட்டும் பணம்
  • பல்லாயிரம் கோடிகளில் டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு உரிமம்
IPL Business: ஐபிஎல் அணிகள் எங்கிருந்து எவ்வாறு எப்படி பணம் சம்பாதிக்கிறது? title=

IPL Business Model: உலகில் கால்பந்து விளையாட்டிற்கு அடுத்தபடியாக அதிக பார்வையாளர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் அதிகம் பேர் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக பணம் வைத்திருக்கும் நிறுவனமாக இந்தியா கிரிக்கெட் வாரியம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக இந்தியன் பிரிமீயர் லீக் (Indian Premier League) மாறியுள்ளது. ஐசிசி நடத்தும் தொடர்களை விட ஐபிஎல் தொடர் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களுகும் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

ஐபிஎல் வணிக மாடல்

நிச்சயமாக, நீங்கள் ஐபிஎல் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறோம்? ஒருவேளை நீங்கள் ஐபிஎல் பார்க்கிறீர்கள் அல்லது ஐபிஎல் தொடர் பற்றி கேள்விப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்குள் சில கேள்வி எழுலாம். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு எப்படி இவ்வளவு சம்பளம் தரப்படுகிறது? ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ (Board of Control for Cricket in India) எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது?  ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள்? என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். இந்த கட்டுரையில் ஐபிஎல் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது? அதன் வணிக மாடல் மற்றும் அதன் வருவாய் குறித்து அறிந்துகொள்வோம்.

மேலும் படிக்க - LIVE | IPL 2024 Auction Updates : தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்... கோடிகளில் புரளப்போவது யார் யார்?

ஐபிஎல் தொடர் எப்பொழுது தொடங்கப்பட்டது?

ஐபிஎல் என்பது இந்தியன் பிரீமியர் லீக்கைக் குறிக்கிறது. இது 2007 இல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் விளையாடப்படுகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் ஏலம் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த வீரர்களை, 10 அணிகளின் உரிமையாளர்கள் ஏலம் வாயிலாக தேர்வு செய்வார்கள்.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக முதன் முதலில் 2007-ல் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிதியுதவியுடன் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) நிறுவப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) ஏற்றுக்கொள்ளவில்லை

முதல் ஐபிஎல் ஏலம் எப்பொழுது தொடங்கியது?

அதன்பிறகு அப்போதைய பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் தொடர் குறித்து ஆலோசனை முன்னெடுத்தார். இறுதியாக 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி "இந்தியன் பிரீமியர் லீக்" தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது. பின்னர் ஜனவரி 24, 2008 அன்று முதல் ஐபிஎல் ஏலங்கள் நடத்தப்பட்டன.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி வருமானம் ஈட்டுகிறது

ஐபிஎல் அணி வாங்குவது: பல்வேறு உரிமையாளர்கள் ஐபிஎல் அணிகளை சொந்தமாக வாங்குகின்றனர். இந்த உரிமையாளர்கள் அணிகளைப் பெறுவதற்கு கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்கின்றனர். இதன்மூலம் வருவாய் கிடைக்கிறது.

ஒளிபரப்பு உரிமைகள்: மீடியா உரிமை விற்பனை ஐபிஎல் வருவாய் ஈட்டுவதில் முக்கிய அம்சமாகும். 2023-27 மீடியா உரிமைகள் ரூ. 48,390 கோடிகளை (சுமார். USD 6.2 பில்லியன்) பெற்றுள்ளது. டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உட்பட பல்வேறு தொகுப்புகளாக உரிமைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிடைக்கும் வருவாயை 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது பிசிசிஐக்கு 40 சதவீததித் தொகை மற்றும் 60 சதவீதத் தொகை ஒவ்வொரு அணிக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

டிஜிட்டல் உரிமைகள்: ஐபிஎல் டிஜிட்டல் உரிமைகளை விற்கிறது, ஸ்ட்ரீமிங் தளங்களை ஆன்லைனில் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதிக்கிறது. டிஜிட்டல் தளங்களில் போட்டிகளைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களை இது ஈர்க்கிறது.

டைட்டில் ஸ்பான்சர்ஷிப்கள்: ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் ஐபிஎல் உரிமையாளர்களின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஆடை நிறுவனங்கள், குளிர்பான உற்பத்தியாளர்கள், மொபைல் ஃபோன் பிராண்டுகள் உட்பட பல்வேறு பிராண்டுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த வருவாயை நேரடியாக அணியின் உரிமையாளர்கள் பெற முடியாது. ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். 40 சதவீதம் பிசிசிஐக்கு மற்றும் மீதமுள்ள 60 சதவீதம் அணியின் உரிமையாளர்களுக்கு பிரித்து தரப்படும் 

மேலும் படிக்க - IPL Auction: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?

விளம்பரம்: ஐபிஎல் போட்டிகளின் போது வர்த்தக இடைவேளை மற்றும் போட்டிகளின் போது டிஜிட்டல் விளம்பரம் போன்ற விளம்பர வாய்ப்புகளை ஐபிஎல் நிர்வாகம் வழங்குகிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பர இடைவெளிக்கு பணம் செலுத்துகின்றன.

ஜெர்சி ஸ்பான்சர்: ஐபிஎல் உரிமையாளர்களுக்கு கூடுதல் வருவாய் ஆதாரமாக ஸ்பான்சர் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. உரிமையாளர்கள் தங்கள் அணியின் ஜெர்சியில் ஸ்பான்சர் நிறுவனங்களின் லோகோ மற்றும் பெயர்கள் இடம்பெற ஒப்பந்தம் மேற்கொள்கின்றன. இது அவர்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. 

டிக்கெட் விற்பனை: மைதானத்தில் நேரில் போட்டிகளைக் காண ரசிகர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். ஒவ்வொரு மைதானத்தில் விற்கப்படும் டிக்கெட் மூலம் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் போன்ற பெரிய மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை வருவாய்க்கு பங்களிக்கிறது.

அதிக வருவாய் ஈட்டும் சாம்பியன் அணி: ஐபிஎல் சீசனின் அதிக வருவாய் ஈட்டும் அணியாக சாம்பியன் படத்தை வெல்லும் இருக்கும். ஏனென்றால் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பெரும் பரிசுத் தொகையை கிடைக்கிறது.

வீரர்களுக்கு சம்பளம்: ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கு முன்பும், வீரர்களை வாங்க ஐபிஎல் ஏலம் நடைபெறும். உரிமையாளர்கள் சிறந்த அணியை உருவாக்க வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள். அப்படி ஏலம் மூலம் வாங்க்கப்படும் வீரர்கள் அந்தந்த அணியின் உரிமையாளர்கள் மூலம் சம்பளம் பெறுகிறார்கள். 

மேலும் படிக்க - IPL Auction: யார் இந்த மல்லிகா சாகர்? ஐபிஎல் வீரர்களை ஏலம் விடும் இவரின் சம்பளம் இவ்வளவா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News