இன்று ஐபிஎல்லில் மோதிக்கொள்ளும் இரு துருவங்கள்!

ஐபிஎல் 2021 இன்று இரண்டு போட்டிகள் நடை பெறவுள்ளது.  டெல்லி - ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் - பஞ்சாப் அணியும் மோத உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2021, 01:55 PM IST
  • இன்று மற்றும் நாளை வார இறுதிநாள் என்பதால் 2 போட்டிகள் நடை பெறவுள்ளது
  • டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி அதில் 7ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது
இன்று ஐபிஎல்லில் மோதிக்கொள்ளும் இரு துருவங்கள்! title=

ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்  தொடங்கி ஐக்கிய அமீரகத்தில் வெகு ஜோராக நடைபெற்று கொண்டு உள்ளது.  இன்று மற்றும் நாளை வார இறுதிநாள் என்பதால் 2 போட்டிகள் நடை பெறவுள்ளது.  அதன்படி இன்று மாலை 3.30 க்கு ஒரு போட்டியும், இரவு 7.30 க்கு ஒரு போட்டியும் நடை பெறுகிறது.

மாலை 3.30 க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி கொள்கிறது.  இந்திய அணியின் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்மேன்களின் தலைமையில் இரண்டு அணிகளும் களம் இறங்க உள்ளது.    டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி அதில் 7ல்  வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகள் விளையாடி 4ல் வெற்றி பெற்று 5 வது  இடத்தில் உள்ளது.  கடைசியாக பஞ்சாப்  அணிக்கு எதிரான போட்டியில் கடைசி இரண்டு ஓவரில் திரில் வெற்றி பெற்றது.  பந்த் தலைமையில் டெல்லி அணியும் பேட்டிங்கில் பலமாக உள்ளது.  இதனால் இன்றைய போட்டி மிகவும் எதிர்பார்ப்பு உள்ளதாக உள்ளது.

ALSO READ CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோற்றது

dc

7.30 க்கு நடைபெற உள்ள மற்றொரு போட்டியில்  பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.  ஹைதராபாத் அணியின் பிளேஆப் கனவு ஏற்கனவே பறிபோகி உள்ளது.  இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் நடராஜனக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்களும் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.  நடராஜனுக்கு அவருக்கு பதிலாக உமரான் மாலிக் தற்காலிக மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் செல்ல வாய்ப்பு உள்ளதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.  கடைசியாக ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் பரிதாபமாக தோல்வி உற்றது.   

srh

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News