FIFA _2018: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்வீடன்!!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற ஸ்வீடன் அணி காலிறுதிக்கு முன்னேறியது. 

Last Updated : Jul 4, 2018, 01:02 PM IST
FIFA _2018: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்வீடன்!! title=

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற ஸ்வீடன் அணி காலிறுதிக்கு முன்னேறியது. 

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இரவு நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், 2வது பாதியில் 66-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் Emil FORSBERG கோல் அடித்தார். 

இதனால், ஸ்வீடன் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். போட்டி முடிவு வரையிலும், கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் சுவிட்சர்லாந்து அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது!

Trending News