மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இளம் பும்ரா...! யார்க்கரில் கில்லி

மும்பை இந்தியன்ஸ் அணியில் தில்ஷன் மதுஷங்காவுக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான கவனோ மபாகா மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2024, 10:35 PM IST
  • மும்பை இந்தியன்ஸில் இளம் பும்ரா
  • குவானா மபாகா வந்து இணைந்தார்
  • தென்ஆப்பிரிக்காவின் இளம் வேகப்புயல்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இளம் பும்ரா...! யார்க்கரில் கில்லி title=

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்கின்ற அதிதீவிரத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவையே டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் பேசி அழைத்து வந்தது. அவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் பேட்டிங்கில் பினிஷர் என்பதால், பல வகையில் மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் அது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | கேப்டன்ஷிப்பில் ரோகித் பெஸ்ட், தோனி ரெண்டாவது இடம் தான் - முன்னாள் சிஎஸ்கே வீரர் 

இந்த ஐபிஎல் தொடரில் மூன்று வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர முடியும். அதனால் இந்திய பிளேயர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியை காயம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அந்த அணியில் இருந்து ஏற்கனவே ஜெரால்ட் கோட்ஸி, ஆஸ்திரேலியாவின் பெஹரான்டாப் ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் இலங்கை அணி வீரரான தில்சன் மதுஷங்காவும் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் பந்துவீச்சு அந்த அணிக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

இந்த பிரச்சனை இருக்ககூடாது என்பதற்காக தான் ஐபிஎல் ஏலத்தில் பவுலர்களை குறிவைத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஆனால், நம்பி வாங்கிய வீரர்களே காயத்தில் சிக்குவது பிரச்சனையாக மாறியுள்ளது. அதனால் மாற்று வீரரை தேட வேண்டிய கட்டாயத்துக்கு மும்பை தள்ளப்பட்டது. குறிப்பாக, அவர்களுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடிய 17 வயது இடதுகை வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மபாகாவை மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. 

அண்டர் 19 உலகக் கோப்பையில் இவரது பந்துவீச்சு பலரையும் கவர்ந்திருந்தது. மேலும் பும்ராவை விட சிறப்பாக வருவேன் என்று இந்த இளைஞர் சவால் விட்டு இருந்தார். தற்போது பும்ரா இருக்கும் அணியிலேயே அவருக்கு இடமும் கிடைத்திருக்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்டு கோட்ஸி (ரூ. 5 கோடி), தில்ஷன் மதுஷங்கா (ரூ. 4.60 கோடி), ஷ்ரேயாஸ் கோபால் (ரூ. 20 லட்சம்), நுவான் துஷாரா (ரூ. 4.80 கோடி), நமன் திர் (ரூ. 20 லட்சம்), அன்ஷுல் காம்போஜ் (ரூ. 20 லட்சம்), முகமது நபி (ரூ. 1.5 கோடி) மற்றும் ஷிவாலிக் சர்மா (ரூ. 20 லட்சம்) ஆகியோரை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சோசியல் மீடியாக்களில் கலாய்க்கப்படும் பெங்களூரு அணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News