T20 World Cup: ரோகித் - டிராவிட் கூட்டணியில் இந்த வீரருக்கு பறிபோன இந்திய அணி வாய்ப்பு

ரோகித் சர்மா மற்றும் டிராவிட் கூட்டணிக்குப் பிறகு இந்திய அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 06:35 AM IST
  • 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி
  • முக்கிய வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை
T20 World Cup: ரோகித் - டிராவிட் கூட்டணியில் இந்த வீரருக்கு பறிபோன இந்திய அணி வாய்ப்பு title=

T20 World Cup 2022: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக இருந்த ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, டிராவிட் மற்றும் ரோகித் சர்மா கூட்டணிக்குப் பிறகு இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுகப்படவே இல்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்ட அவருக்கு 20 ஓவர் உலகக்கோப்பைக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை.   

புறகணிக்கப்படும் அந்த வீரர்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு தேர்வாளர்கள் இடம் கொடுக்கவில்லை. சாஹல் - குல்தீப் கூட்டணி பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர். ஆனால், குல்தீப் யாதவுக்கு அண்மைக்காலமாக இந்திய அணியில் இடம் கிடைப்பதில்லை. தொடர்ந்து பல முக்கியமான போட்டிகளில் அவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் படிக்க | கோலிக்கு முன்னாள் வீரர்கள் சப்போர்ட்... அப்செட்டில் ராகுல்

ஐபிஎல் 2022-ல் சிறப்பான பந்துவீச்சு 

ஐபிஎல் 2022-ல் குல்தீப் யாதவ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ், 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய அவர், மீண்டும் திரும்ப முடியவில்லை. தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கும் குல்தீப் யாதவுக்கு ரோகித் - டிராவிட் கூட்டணி வாய்ப்பு கொடுப்பது பற்றி சிந்திக்கவே இல்லை. 

குல்தீப் யாதவ் டிராக் ரெக்கார்டு

குல்தீப் யாதவ் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளையும், 69 ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் இந்தியாவின் முதல் சைனாமேன் பந்துவீச்சாளர். இவரின் இடத்தில் தான் அஸ்வின் மற்றும் ரவிபிஷ்னோய் 20 ஓவர் உலக க்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், ஒய் சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News