IND vs ENG: 2வது டெஸ்ட்டில் தோல்வி! இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து!

India vs England: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பிறகு இங்கிலாந்து அணி, துபாய்க்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 7, 2024, 11:57 AM IST
  • 1-1 என்று தொடர் சமநிலை.
  • மீதமுள்ள போட்டிகளை வெல்ல மும்முரம்.
  • தற்போது துபாயில் பயிற்சியில் உள்ளனர்.
IND vs ENG: 2வது டெஸ்ட்டில் தோல்வி! இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து! title=

India vs England: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  தற்போது தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கு பின்னர், 3வது டெஸ்ட் தொடங்கும் முன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு சென்றுள்ளது.  அங்கு சிறப்பு பயிற்சி முகாமை இங்கிலாந்து அணி மேற்கொள்ள உள்ளது.  ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து.

மேலும் படிக்க | Rohit Sharma: ரோஹித்துக்கு பதில் ஏன் ஹர்திக் பாண்டியா... மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பளீச்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா, இங்கிலாந்தை 2வது இன்னிங்சில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இங்கிலாந்து வீரர்கள் 2வது இன்னிங்சில் தவறான ஷாட் அடித்து அவுட் ஆனார்கள். சாக் க்ராலியை மட்டும் 73 ரன்கள் அடித்து இருந்தார்.  இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம், ஷுப்மான் கில் சதம் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான பந்து வீச்சு ஆகியவை வெற்றிக்கு உதவியது.  பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சால் 9 விக்கெட்களை எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.  

இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து வீரர்கள் துபாயில் ஓய்வு எடுக்க மற்றும் சிறப்பு பயிற்சிகளுக்காக சென்றுள்ளனர்.  மேலும் அங்கு இங்கிலாந்து வீரர்கள் தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க உள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.  அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், மீதலுள்ள டெஸ்ட் போட்டிகள் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம், "நாங்கள் மீண்டும் கம்பேக் கொடுப்போம். இங்கிலாந்து வீரர்கள் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்துள்ளனர், எங்களுக்கு இன்னும் மாறுபட்ட டெஸ்ட் போட்டிகள் உள்ளன. 

தோல்வியடைவது நல்லதல்ல, ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினோம். விராட் கோலி கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரது திறமை மற்றும் போட்டியில் அவரது ஈடுபாடை பெரிதும் மதிக்கிறேன். அவருக்கு எதிராக நான் விளையாடி உள்ளேன். சிறந்த வீரர்களுக்கு எதிராக நீங்கள் வெற்றி பெற்றால் அந்த உணர்வுக்கு மதிப்பில்லை.  மீதலுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.  அவர் ஒரு சிறந்த போட்டியாளர். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் ரசித்தேன். நாங்கள் தற்போது 1-1 என்ற கணக்கில் உள்ளோம். இது நாங்கள் இடத்தில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. மீதலுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.

மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் இடம்

3வது டெஸ்ட் பிப்ரவரி 15-19 சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், ராஜ்கோட்
4வது டெஸ்ட் பிப்ரவரி 23-27 JSCA இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ், ராஞ்சி
5வது டெஸ்ட் மார்ச் 7-11 ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மசாலா

மேலும் படிக்க | வெஸ்ட் இண்டீஸ் வீரர் கடத்தல் - தென்னாப்பிரிக்காவில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News