விக்கெட் எடுத்த குஷியில் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ வினோத நடனம்

ஐபிஎல் 2022, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஐபிஎல்-2022 இன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2022, 10:18 AM IST
  • டுவைன் பிராவோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • விநோதமான முறையில் கொண்டாட்டம்
விக்கெட் எடுத்த குஷியில் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ வினோத நடனம் title=

இந்தியன் பிரீமியர் லீக் 2022, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இந்த சீசனின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்றது, இதில் கேகேஆர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு வகையில் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக ஆக்கியவுடன் சென்னை அணி தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. இப்போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது, பதிலுக்கு கேகேஆர் 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முடிவு சென்னை ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும், டுவைன் பிராவோ அவர்களை மகிழ்வித்த தருணமும் இதில் அடங்கியுள்ளது. உண்மையில் இந்த சம்பவம் கேகேஆர் இன் இன்னிங்ஸின் 6.2 ஓவரில் அறங்கேரியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியிடம் கேட்ச் கொடுத்தார்.

மேலும் படிக்க | பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2022 - வார்னேவுக்கு நினைவஞ்சலி

தனித்துவமான முறையில் கொண்டாட்டம்
விக்கெட் கிடைத்தவுடன் டுவைன் பிராவோவின் மகிழ்ச்சி இந்த வீடியோ மூலம் காணப்படுகிறது. அதை தனக்கே உரிய பாணியில் கொண்டாடினார். அத்துடன் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் பிராவோ நடு மைதானத்தில் நடனமாடத் தொடங்கினார், அதன் வீடியோவை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

டுவைன் பிராவோ பெயரில் 170 ஐபிஎல் விக்கெட்டுகள்
டுவைன் பிராவோ கேகேஆர் அணிக்கு எதிராக மொத்தம் 3 விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பிராவோ பெற்றுள்ளார். அத்துடன் மலிங்காவின் சாதனையை சமன் செய்துள்ளார். பிராவோ 170 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 24.31 சதவீதம். சிறந்த பந்து 4/22 ஆகும்.

மேலும் படிக்க | தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News