Astro Traits: ஆண்களை வசீகரிப்பதில் வல்ல ‘4’ ராசிப் பெண்கள்!

ஜோதிடத்தில்  ராசிகளின் தன்மைகள் மற்றும் குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், சில ராசிப் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும், ஆண்களை மிகவும் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2023, 02:59 PM IST
  • எல்லோருடனும் எளிதில் கலந்து பழகும் குணம் இவர்களுக்கு உண்டு.
  • தோற்றத்தில் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.
  • தன்னுடைய அறிவு மற்றும் ஞானத்தால், அவள் பிறர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்.
Astro Traits: ஆண்களை வசீகரிப்பதில் வல்ல ‘4’ ராசிப் பெண்கள்! title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட குணங்கள் மற்றும் இயல்புகள் உள்ளன. இந்நிலையில் ஜோதிடத்தில், சில ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அனைவருடனும் மிக எளிதாக பழகுகுபவர்களாக இருக்கிறார்ல்கள். சில ராசிப் பெண்கள் தன் வசீகரத்தாலும், அழகாலும் மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களின் பெண்களால் ஆண்கள் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த ராசி பெண்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

கன்னி:

கன்னி ராசி பெண்கள்  மிகவும் அழகாகனவர்களாகவும், தோற்றத்தில் கவர்ச்சியாகவும் இருப்பார்கள். ஆன்கள் ஒரு நொடியில் அவளுடைய அழகைக் கண்டு பைத்தியமாகிவிடுகிறார்கள். அவர்களின் குறும்பு, நேசமான மற்றும் மகிழ்ச்சியான இயல்பு காரணமாக, இந்த ராசியின் குணநலன் காரணமாக, பெண்கள் எளிதில் அனைவராலும் விரும்பப்படுகிறார்கள்.

கன்னி ராசி பெண்கள் பொதுவாக மிகவும் வெளிப்படையாக இருப்பதில்லை.  அவள் தன் மனதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. தான் யாரையாவது காதலித்தால், தன் துணையைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டாள். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கன்னி ராசி பெண்கள் அனைத்து விதமான சூழ்நிலையிலும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிப் பெண்கள் மிகவும் லட்சியம் மற்றும் மகிழ்ச்சியான இயல்புடையவர்கள். இந்த ராசி பெண்கள் யாரிடமும் வெட்கப்பட மாட்டார்கள். அவரது கலகலப்பான பாணியால், அவர் விரைவில் ஆண்களின் இதயத்தில் இடம் பெறுகிறார். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் யாருடைய தலையீடுகளையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

விருச்சிக ராசி பெண்கள் உயரமாகவும், கம்பீரமான தோற்றம் கொண்டுள்ளதோடு கவர்ச்சியாகவும் இருப்பார்கள். அவரது ஆளுமையால் எவரும் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் உறவுகளிடன் உண்மையுடன் இருப்பார்கள். அவர்கள் உறவுகளை நேர்மையுடனும் பொறுப்புடனும் பராமரிக்கிறார்கள்.

மிதுனம்:

மிதுன ராசி பெண்கள் மிகவும் மகிழ்ச்சியான இயல்புடையவர்கள். அவர்கள் பேசும் விதம் மிகவும் வித்தியாசமானது, மக்கள் விரைவில் அவர்கள் மீது ஈர்க்கப்படுவார்கள். இந்த ராசியின் பெண்களை பெரும்பாலும் பலர் சூழந்திருப்பார்கள். அவருடைய நண்பர்கள் பட்டியல் மிக நீளமானது.

மிதுன ராசிப் பெண்கள் புதுமையான விஷயங்களைச் செய்ய விரும்புவார்கள். வேலையில் சாதனை செய்ய விரும்புவார்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொள்வார்கள். தன்னுடைய அறிவு மற்றும் ஞானத்தால், அவள் பிறர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறாள். இந்த ராசிக்காரர்களிடம்  பேசுவது ஆண்களுக்குப்மிகவும் பிடிக்கும்.

மகரம்:

மகர ராசி பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக கருதப்படுகிறார்கள். எந்த ஒரு வேலையையும் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் செய்கிறாள். எல்லோருடனும் எளிதில் கலந்து பழகும் குணம் இவர்களுக்கு உண்டு. தோற்றத்தில் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதால், அனைவரும் மிக விரைவாக அவர்கள் மீது ஈர்க்கப்படுகிறார்கள்.

மகர ராசி பெண்கள் மிக எளிதாக நண்பர்களாகி விடுவார்கள். அவர்களின் நேசமான இயல்பு காரணமாக, இந்த ராசி பெண்களும் தங்கள் வாழ்க்கையில் யாருக்கு இடம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மிக நேர்மையுடன் இருக்கிறார்கள். இதனுடன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து ஒற்றுமையை பேணி காப்பவலாக இருக்கிறாள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News