Weekly Horoscope: மகாலட்சுமி யோகத்தினால் இந்த வாரம் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... அதிர்ஷ்ட ராசிகள் எவை!

Weekly Horoscope: மார்ச் மூன்றாவது வாரம் பல வகைகளில் சிறப்பான வாரமாக இருக்கும். கும்ப ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால், இந்த வாரம் உருவாகும் மகாலட்சுமி யோகம் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2024, 12:47 PM IST
  • மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில், எந்தெந்த ராசிகள் அபரிவிதமான பலனை பெறப் போகிறார்கள்?
  • கும்ப ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால், இந்த வாரம் மகாலட்சுமி யோகம் உருவாகிறது.
  • மார்ச் மாதம் மூன்றாவது வாரம், சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இருக்கும்.
Weekly Horoscope: மகாலட்சுமி யோகத்தினால் இந்த வாரம் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... அதிர்ஷ்ட ராசிகள் எவை! title=

Weekly Horoscope in Tamil: மார்ச் மூன்றாவது வாரம் பல வகைகளில் சிறப்பான வாரமாக இருக்கும். கும்ப ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால், இந்த வாரம் உருவாகும் மகாலட்சுமி யோகம் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும். கிரகங்களின் நிலைகள், மற்றும் மகாலட்சுமியோகம் காரணமாக, மார்ச் மாதம், 18ஆம் தேதியுடன் தொடங்கும் மூன்றாவது வாரத்தில், எந்தெந்த ராசிகள் அபரிவிதமான பலனை பெறப் போகிறார்கள், அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பண வரவுக்கு குறைவிருக்காது, மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

ரிஷப ராசிக்கான இந்த வார பலன்கள்

ரிஷப ராசிக்கு மார்ச் மாதம் மூன்றாவது வாரம், சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இருக்கும். மகாலட்சுமி யோகத்தினால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். வேலையில் தொழிலில் அபரவீதமான முன்னேற்றத்தை காணலாம். முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை சரி கிடைக்கும்.

மிதுன ராசிக்கான இந்த வார பலன்கள்

மிதுன ராசிகளுக்கு மார்ச் மாதம் மூன்றாவது வாரம் மிகவும் சிறப்பான வாரமாக இருக்கும் என்று சொல்லலாம். வேலையில் தொழிலில் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும். உங்களது செயல் திறன் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய அளவில் பலன்களை அள்ளி கொடுக்கும். மேலதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்காத நண்பரே சந்திப்பதால் மனம் மகிழ்ச்சி அடையும். பண வரவிற்கு குறைவிருக்காது.

கன்னி ராசிக்கான இந்த வார பலன்கள்

கன்னி ராசிகளுக்கு மார்ச் மாதம் மூன்றாம் வாரம், பிரச்சனைகள் இருந்து உங்களை விடுவிக்கும் பாரமாக இருக்கும். தடைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவு, உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமண வாழ்க்கை கைகூடும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்கள் தொடங்கும் எனலாம்.

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் வெற்றி, அபரிமிதமான பண வரவு

துலாம் ராசிக்கான இந்த வார பலன்கள்

துலாம் ராசியினரை பொறுத்தவரை, மார்ச் மாதம் மூன்றாவது வாரம், செல்வத்தை அள்ளித் தரும் வாரமாக இருக்கும். மகாலட்சுமியும் யோகத்தின் முழு பலனை இவர்கள் அடைவார்கள். கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, நீங்கள் முன்னேற்ற பாதையில் வீர நடை போட்டு செல்வீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனதிற்கு அமைதியும் நிம்மதியும் பிறக்கும். தொழிலதிபர்கள், எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எனினும் சிறிய உடல்நல பிரச்சனை தானே என அலட்சியப்படுத்தாமல், உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

மகர ராசிக்கான இந்த வார பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மூன்றாம் வாரம், எதிர்பாராத பண பலன்களை கொடுக்கும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் கூடுதல் முயற்சிகள், மேற்கொள்ளும் கடின உழைப்பு ஆகியவற்றிற்கு, தக்க பலன் கிடைக்கும். விரும்பிய பலன்களை பெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Vastu: வீட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கும் சீன வாஸ்து! ஆமையின் வாயில் காசு அதிர்ஷ்டத்தைக் கொட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News