சனியின் அருளால் நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், கேட்டது கிடைக்கும்

Sani Vakra Nivarthi: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 27, 2023, 01:32 PM IST
  • மகர ராசிக்காரர்கள் சனி வக்ர நிவர்த்தியின் பலனாக பல நன்மைகளைப் பெறுவார்கள்.
  • இந்த காலகட்டத்தில் சனி மகர ராசிக்காரர்களின் நிதி வீட்டில் சஞ்சரிப்பார்.
  • இது எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கு வழிவகுக்கும்.
சனியின் அருளால் நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், கேட்டது கிடைக்கும் title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: நவம்பர் 4, 2023 அன்று கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சனி பகவான் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவரே மிக மெதுவாக நகரும் கிரமாக உள்ளார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற அவர் அதிக நாட்கள் எடுப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கின்றன. சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். 140 நாட்களுக்குப் பிறகு, சனி கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். நவம்பர் 4ம் தேதி மதியம் 12:35 மணிக்கு சனி வக்ர நிவர்த்தி அடைவார். 

சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்

மேஷ ராசி (Aries)

சனியின் வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையிலும் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலையை மாற்ற நினைக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

மிதுன ராசி (Gemini)

சனி வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். பணி இடத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். நவம்பர் 4-ம் தேதி முதல் மிதுன ராசிக்காரர்கள் கொஞ்சம் முயற்சி செய்தாலே வெற்றி கிடைக்கும். உங்கள் நிதி நிலையும் மேம்படும். எதிர்பாராத பண ஆதாயங்கள் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தலாம். உங்களுக்கு ஏதேனும் சட்ட தகராறு இருந்தால் அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக கிடைக்கலாம்.

துலா ராசி (Libra) 

துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலையில் நிலைத்தன்மை கிடைக்கும். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், உங்களுக்கு வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். ஆன்மீக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணம் சம்பந்தமான அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் நிலம், வாகனம், குடும்பத்தின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி (Capricorn)

மகரம் ராசிக்காரர்கள் சனி வக்ர நிவர்த்தியின் பலனாக பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் சனி மகர ராசிக்காரர்களின் நிதி வீட்டில் சஞ்சரிப்பார். இது எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பெயர்ச்சியால் மூதாதையர் சொத்துக்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த காலம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

கும்ப ராசி (Aquarius)

அக்டோபர் 4 ஆம் தேதி ஏற்படவுள்ள சனி வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நிதி நன்மைகளை பெறுவார்கள். சனிபகவான் இந்த ராசிக்கு அதிபதியாக இருப்பதால், அவர் இந்த ராசிக்காரர்கள் மீது முழுமையான அருளை பொழிவார். இதன் விளைவாக, வணிகம் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தைக் காணும். இது தவிர, உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். மேலும், இந்தக் காலத்தில் பணத் தட்டுப்பாடு இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் சனி நேரடியாக இருப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றே கூறலாம்.

மேலும் படிக்க | சனி தோஷம் மட்டுமல்ல, ராகு கேது தோஷங்களையும் போக்கும் கருப்புக் கயிறு பரிகாரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News