நவம்பர் முதல் இந்த ராசிகள் மீது அருளை பொழிவார் சனி: உச்சத்தில் மகிழ்ச்சி, செழிப்பு

Sani Vakra Nivarthi:  சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், ஷஷ ராஜயோகத்தின் பலனால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பொன் போல் ஜொலிக்க ஆரம்பிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2023, 04:16 PM IST
  • சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும்.
  • கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
  • உயர் பதவியில் இருப்பவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வீர்கள்.
நவம்பர் முதல் இந்த ராசிகள் மீது அருளை பொழிவார் சனி: உச்சத்தில் மகிழ்ச்சி, செழிப்பு title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசி மட்டுமல்லாமல் கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய அஸ்தமன நிலைகள், வக்ர இயக்கம், வக்ர நிவர்த்தி என இவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வக்ர நிலையில் கிரகங்கள் தலைகீழ் இயக்கத்தில் செல்கின்றன. வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் அவை நேர் திசையில் இயங்கத் தொடங்கும். 

வேத ஜோதிடத்தில், சனி பகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். அனைத்து கிரகங்களையும் விட இவர் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். இதன் காரணமாக, ராசிகளில் இவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கின்றது. இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். 
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் இருக்கிறார். அவர் நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அவர் வக்ர நிவர்த்தி அடைந்தவுடன் கும்ப ராசியில் ஷஷ ராஜயோகம் உருவாகும். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், ஷஷ ராஜயோகத்தின் பலனால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பொன் போல் ஜொலிக்க ஆரம்பிக்கும். இவர்கள் நினைத்தது அனைத்தும் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். இவர்களது மகிழ்ச்சி உச்சத்தில் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி வக்ர நிவர்த்தியால் அட்டகாசமான நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள்

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், மிகுந்த நன்மைகள் உண்டாகும். ப்ராபர்டி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இவர்கள் எடுத்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். 

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகவும் நன்மை பயக்கும். ஷஷ ராஜயோகம் இவர்களின் தலைவிதியை மாற்றி அமைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தொழிலில் பலமான முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் தொழிலில் பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனியின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு உயர் பதவியையும் பெரிய சம்பளத்தையும் தரும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள், இது உங்கள் வாழ்க்கையில் நிதி செழிப்பைக் கொண்டுவரும். வியாபாரம் விரிவடையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்.

மேலும் படிக்க | திருமணம் உடனே நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்: இது சரியான நேரம்

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் அதிக பலன்களை தரும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு வலுவாக இருக்கும். பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் பல நன்மைகள் உண்டாகும். சர்ச்சைக்குரிய ஆனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

கும்ப ராசி

சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும். கும்ப ராசிக்கு அதிபதி சனி தற்போது கும்ப ராசியில்தான் சஞ்சரித்து வருகிறார். கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வீர்கள். பண பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். கூட்டுத் தொழிலில் வெற்றி பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 1 ஆண்டுக்கு பிறகு கன்னியில் சூரியன்.. இந்த ரசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வாம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News