ராமரின் அருளை பெறும் இந்த 4 ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபட்டால் வாழ்க்கை அமோகம்!

Sriram Favourite Zodiacs: சில ராசிகள் இயல்பாகவே பகவான் ஸ்ரீ ராமரின் அருளைப் பெற்றவை. அந்த சிறப்பான ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2024, 08:06 AM IST
  • பகவான் ஸ்ரீ ராமரின் அருளைப் பெற்ற ராசிகள்
  • மீன ராசிக்கு ராமரின் அருளாசி
  • 4 ராசிகளுக்கு விஷ்ணு பகவானின் பூரண அருள்
ராமரின் அருளை பெறும் இந்த 4 ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபட்டால் வாழ்க்கை அமோகம்! title=

அயோத்தியில் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ராம ஜென்மபூமியில் ராமர் கோவில் திறக்கப்பட்டு குழந்தை ராமர் தனது வீட்டிற்கு திரும்பினார். பகவான் ஸ்ரீராமரின் நாமத்தை உச்சரிப்பதால், வாழ்வில் ஏற்படும் அனைத்து துக்கங்களும் தூசாய் பறந்து போய்விடும். ராமரின் நாமத்தை உச்சரிப்பதால் மனதில் அமைதி கிடைக்கும் என்றால், சில ராசிகள் இயல்பாகவே பகவான் ஸ்ரீ ராமரின் அருளைப் பெற்றவை. அந்த சிறப்பான ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பகவான் ஸ்ரீ ராமர், மூன்று முதல் தெய்வங்களில் ஒருவரான காக்கும் கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும், அவருடைய ஆசீர்வாதங்கள் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. குழந்தையாய் தவழ்ந்து உலகையே ஜெபிக்க வைத்த மகவிஷ்ணுவுக்கு பிடித்தமான ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா? தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீராமரின் கடைக்கண் பார்வையை பெறும் ராசிகள்

மீனம்

ஜோதிடத்தின் படி, மீனத்தை ஆளும் கிரகம் வியாழன். ஸ்ரீராமரின் ஆசிகள் மீன ராசிக்காரர்கள் மீது எப்போதும் இருக்கும். ஸ்ரீராமரின் அருளால் வாழ்வில் செல்வமும் வளமும் பெறும் மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் உயர் பதவி, புகழ், கௌரவம் கிடைக்கும். இவர்கள் பகவான் விஷ்ணுவின் எந்த அவதாரத்தை வணங்கினாலும், வெற்றிகள் இவர்களை வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களும் பகவான் ஸ்ரீ ராமரின் சிறப்பு ஆசிகளைப் பெறுகிறார்கள். இந்த ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். துலாம் ராசிக்காரர்கள் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது இயல்பு. அவர்கள் பல வகையான மத மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். துலாம் ராசிக்காரர்கள், ஸ்ரீராம சந்திரனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆன்மீக அறிவையும் ஸ்ரீராமரின் அருளால் பெற்றிருக்கும் இந்த ராசிக்காரர்கள், எந்த கடினமான சூழ்நிலையில் இருந்தும் மீண்டு வருவார்கள்.

மேலும் படிக்க | Ramar Jathagam : பூஜையறையில் ஸ்ரீராமரின் ஜாதகம் வைத்து பூஜித்தால் கிடைக்கும் நன்மைகள்!  
 
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களும் ஸ்ரீராமருக்கு பிரியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். வாழ்க்கையில் வரும் கஷ்டங்களிலிருந்து ராமர் அவர்களைக் காப்பாற்றுகிறார். மீதுன ராசிக்காரர்கள் பொதுவாக சமூகத்தில் உயர் பதவியைப் பெறுவார்கள். சிரமமான மற்றும் நெருக்கடியான காலங்களில், ராமரின் நாமத்தின் அடிப்படையில் மட்டுமே எந்த ஆபத்தையும் ஒருவர் கடக்க முடியும். மிதுன ராசிக்காரர்கள், ஸ்ரீராமரையும் அவரது பரிவாரத்தையும் வணங்கினால், வாழ்க்கையில் பெரும் வெற்றியையும் புகழையும் அடைவார்கள்.

கடக ராசி

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கடக ராசிக்காரர்களும் பகவான் ஸ்ரீ ராமருக்கு பிடித்தமானவர்கள். பகவான் ஸ்ரீ ராமரின் அருளால், இந்த ராசியினர் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுகிறார்கள். ஸ்ரீராமரின் அருளால் இவர்களுக்கு புகழும் கௌரவமும் கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு ராமரின் அருளால் பணியிடத்தில் முன்னேற்றம் அடையும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அயோத்தி வந்தார் குழந்தை ஸ்ரீராமர்... 1528 முதல் 2024 வரை... கடந்து வந்த பாதை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News