ஜனவரி 25 ராசிபலன்! சோபகிருது ஆண்டின் தை 11ம் நாள் உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Horoscope Jan 25: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்களை இதில் தெரிந்துகொள்ளலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2024, 05:54 AM IST
  • தொழில் ரீதியாக நல்ல நாளை எதிர்பார்க்கும் மேஷம்
  • சிம்மத்துக்கு பரபரப்பான நாள்
  • சுறுசுறுப்பு அவசியம் மீன ராசிக்காரரே!
ஜனவரி 25 ராசிபலன்! சோபகிருது ஆண்டின் தை 11ம் நாள் உங்கள் ராசிக்கு என்ன பலன்?  title=

2024 January 25 Horoscope : அனைத்து ராசிகளும் தங்களுக்கான இன்றைய பலன்களை அறிந்து கொள்வது, அவர்களது நாளை திட்டமிட உதவலாம். இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதா இல்லையா என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல நாளை திட்டமிட்டால் இந்த நாள் இனிய நாளாக மலரும்.  

சோபகிருது ஆண்டின் தை 11ம் நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம்: நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே மற்றவர்களையும் நடத்துங்கள். சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் நீங்கள் வழக்கமாக அதைத் திருப்பித் தருவதில்லை. 

ரிஷபம்: வேலையில் நன்றாக செயல்படுவீர்கள். உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது.

மிதுனம்: வெற்றி உங்களுக்கு மிக எளிதாக வரும். உங்கள் வேலை மற்றும் தொழிலில் நீங்கள் கவனம் செலுத்துவதால், நீங்கள் விரும்புபவர்களை நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விமர்சிப்பீர்கள். மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கவனமாகக் கையாளுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல செய்தி வந்து சேரக்கூடும். நம்பிக்கையை இழக்காதீர்கள், ஏனென்றால் நீங்கள் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் விஷயங்கள் எப்போதும் உங்களுக்கு பிடித்த வகையில் நடக்கும். 

மேலும் படிக்க | மகரத்தில் பெயர்ச்சி ஆகும் சூரியன்: பொங்கல் முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

சிம்மம்:  இன்று நீங்கள் பங்களிக்க நிறைய உள்ளது மற்றும் உங்கள் மனதில் நிறைய எண்ணங்கள் ஓடும். உங்கள் யோசனைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்துங்கள். இதனால் மக்கள் அதை கவனிக்க முடியும். உங்கள் படைப்பாற்றலை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும்.  

கன்னி: பணிச்சுமை அதிகரிக்கலாம், இது அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கவலைப்பட வேண்டாம், நீங்கள் செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு முன்னுரிமை அளித்தால், எவ்வளவு வேலை இருந்தாலும் சிறப்பாகக் கையாள முடியும்.

துலாம்: நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு தோள் கொடுங்கள். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும், குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும், வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்: பொறுப்புகள் அதிகமாகும், உங்கள் தகுதிக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும் என்றாலும் உங்கள் திறமைகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்படும். எல்லாவற்றையும் சுயமாக நீங்களே செய்ய முயற்சி செய்யுங்கள், பிறரை சார்ந்திருப்பதை தவிப்பது நல்லது.

மேலும் படிக்க | 2024 குரு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

தனுசு: கனவு காணும் அனைத்த்தையும் செய்வது சாத்தியமில்லை, யதார்த்தமான இலக்குகளை அமைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். விரும்பும் அனைத்தும் மெதுவாக உங்களிடம் வரும், ஆனால் அது சாத்தியமாக இருக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

மகரம்: குடும்பத்தில் நிம்மதி நிலவும், மகிழ்ச்சிக்காக செலவு செய்ய வேண்டியிருக்கலாம். எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டாம். உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டிற்கும் சிறிது நேரம் தேவை, இது ஓய்வுக்கான நல்ல நாள்.

கும்பம்:  உற்சாகமான நாள். எதிர்பாராத சூழ்நிலையை சந்திக்க நேரிடும், அது கொடுக்கும் அனுபவம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். குடும்பத்தின் மீது பற்று அதிகமாகும்.

மீனம்: றுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட்டாலும், வேலைகள் முடியாது. திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அவசியம் இல்லாத வேலைகளை ஒத்திப் போடவும். வாகனங்களில் பயணிக்கும்போது கவனம் தேவை

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அதிரடி... ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News