இனிய நாளாக மலர்ந்த சோபகிருது ஆண்டு மாசி 16! யாருக்கு சுபம்? எவருக்கு கவனம் தேவை?

Rasipalan For 12 Zodiacs : இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது சுபமான நாளாக மாறும். வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 07:04 AM IST
  • 3 ராசிகளுக்கு அருமையான நாள்
  • எந்த ராசிக்காரருக்கு பயணங்களில் கவனம் தேவை?
  • மனதில் மகிழ்ச்சி பொங்கும் மீன ராசியினரே...
இனிய நாளாக மலர்ந்த சோபகிருது ஆண்டு மாசி 16! யாருக்கு சுபம்? எவருக்கு கவனம் தேவை? title=

இன்று சோபகிருது ஆண்டு, மாசி 16ம் நாள். இன்றைய நாள் நல்ல நாளாக மலரட்டும். இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது சுபமான நாளாக மாறும். வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.  

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் - (28-02-2024)

மேஷம் 
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மேம்படும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

ரிஷபம் 
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும்.  

மிதுனம் 
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபார ரகசியங்களை புரிந்து கொள்ளலாம். கடன் சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கதனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.  

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி அஸ்தமனம்.. இந்த ராசிகளுக்கு ராஜ குபேர பொற்காலம்

கடகம் 
இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். 

சிம்மம் 
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மிஷன் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும்.  பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் துரிதம் உண்டாகும். 

கன்னி 
மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பிறரைப் பற்றிய கருத்துக்கள் சொல்வதைத் தவிர்க்கவும்.  

துலாம் 
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைகூடிவரும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும்.  

விருச்சிகம் 
அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. ஜாமின் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள், சேமிப்பு அதிகரிக்கும். 

மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கை... அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘4’ ராசிகள்!

தனுசு 
செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  

மகரம் 
மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். 

கும்பம் 
வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத பல விஷயங்கள் நடைபெறும். ஆனால், எதிலும் நிதானத்துட செயல்படவும். முக்கியமான முடிவுகல் எடுப்பதையும், குடும்பத்தினரின் மனோநிலைக்கு எதிரான செயல்பாடுகளையும் தவிர்க்கவும்.  

மீனம் 
எதிலும் உற்சாகத்தோடு செயல்படும் காலம் இது. வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும் என்றாலும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

 

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்குப் பின் குருவுடன் இணையும் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News