Astro: ருச்சக யோகம்... ஐந்து அதிர்ஷ்ட ராசிகளும்... பரிகாரங்களும்!

Daily Horoscope 04 February 2024: பிப்ரவரி ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்நாளில் ருச்சக யோகம் உருவாகிறது. ஹர்ஷண யோகம் கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய சேர்க்கையினால் ஏற்படும் சுபயோகத்தின் பலன்களை ஐந்து ராசிக்காரர்கள் பெறுவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2024, 12:44 AM IST
Astro: ருச்சக யோகம்...  ஐந்து அதிர்ஷ்ட ராசிகளும்... பரிகாரங்களும்! title=

Daily Horoscope 04 February 2024: பிப்ரவரி ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்நாளில் ருச்சக யோகம் உருவாகிறது. ஹர்ஷண யோகம் கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய சேர்க்கையினால் ஏற்படும் சுபயோகத்தின் பலன்களை ஐந்து ராசிக்காரர்கள் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செவ்வாயின் நிலை வலுவடைந்து அதிர்ஷ்டம் சாதகமான பலன்களை கொடுக்கும்.

மேஷ ராசிக்கான பலன்கள்

ராசிகளுக்கு பிப்ரவரி ஆறாம் தேதி சிறப்பான நாளாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும் ஆசை ஏற்படும். வருமானத்தை அதிகரிப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் உத்திகளில் மாற்றங்கள் செய்வீர்கள். இதனால் வியக்கத்தக்க பலன்கள் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பரிகாரங்கள் தடைகள் விலக செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து 21 நாட்கள் பகவான் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.

கடக ராசிக்கான பலன்கள்

கடக ராசியினருக்கு பிப்ரவரி ஆறாம் தேதி அனுமனின் அருளால் அதிர்ஷ்டம் கைகூடும். உங்கள் செயல்களில் விழிப்புடன் இருப்பீர்கள். இதனால் பிரச்சனைகள் உங்களை பாதிக்காமல் தடுக்கப்படும். ஆன்மீக விஷயங்களில், ஆர்வம் அதிகரித்து அதற்காக செலவு செய்வீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் சிவப்பு நிற ஆடை அணிவது சுப பலன்களை கொடுக்கும். மேலும் பகவான் அனுமனுக்கு வெள்ளத்தால் ஆன இனிப்பை நைவேத்தியம் செய்யலாம்.

சிம்ம ராசிக்கான பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி ஆறாம் தேதி இனிமையான நாளாக இருக்கும். வாழ்க்கையில் வசதிகள் கூடும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கடைப்பிடிக்கும் புதிய உத்திகள் பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.

பரிகாரம் நிதிநிலைமை சிறப்பாக இருக்க, அனுமன் கோவிலுக்கு 5 செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியாக செல்வது பலன் அளிக்கும். பசுவிற்கு உணவளிப்பதும் சுப பலன்களை கொடுக்கும்.

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

கன்னி ராசிக்கான பலன்கள்

கன்னி ராசிகளுக்கு பிப்ரவரி ஆறாம் தேதி மங்களகரமான நாளாக இருக்கும். பகவான் ஹனுமான் அருளால் செல்வம் பெருகி வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் பணிகள் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடாமல் இருக்க செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்தும் பொருட்களை தானம் செய்யவும். பசுவிற்கு உணவளிப்பதும் பலன் கொடுக்கும்.

மீன ராசிக்கான பலன்கள்

மீன ராசிகள் பகவான் அனுமனின் அருளால் வெற்றிகளை குவிப்பார்கள். செல்வத்திற்கு குறைவிருக்காது. சிந்தனையில் நேர்மையான மாற்றம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. வேலையில் தொழிலில் இருப்பவர்கள் வருமானத்தை பெருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

பரிகாரங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் தடைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட ஹனுமன் கோவிலுக்கு சென்று, 11 முறை பிரகாரத்தை சுற்றி வரவும். அப்போது அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

மேலும் படிக்க | மகரத்தில் அஸ்தமனமாகும் புதன்... நெருக்கடிகளை சந்திக்க போகும் சில ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News