பூவாய் மலரும் மின்கம்ப மாயஜாலம்! அதிர்சியடையும் சிறுமியின் க்யூட் ரியாக்‌ஷன்

Funny Girl Video: என்ன இது? இப்படி கூட நடக்குமா? என நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ இது! ஒன்று இணையத்தில் வைரல் ஆகும் வித்தியாசமான மாஜிக் லைட்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2023, 03:30 PM IST
  • அதிர்சியடையும் சிறுமியின் க்யூட் ரியாக்‌ஷன்
  • இணையத்தில் வைரல் மாஜிக் லைட் வீடியோ
  • பூவாய் மலரும் மின்கம்ப மாயஜாலம்!
பூவாய் மலரும் மின்கம்ப மாயஜாலம்! அதிர்சியடையும் சிறுமியின் க்யூட் ரியாக்‌ஷன் title=

வைரல் வீடியோ: இணையத்தில் ஆயிரக்கணக்கான விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன. மனதை லேசாக்கி, வேலைப்பளுவில் இருந்து சற்று ஆசுவாசம் கொடுக்க, இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் உதவுகின்றன. சமூக ஊடகங்கள் நம்முடைய தினசரி பின்னிப்பிணைந்து விட்ட நிலையில், அவற்றில் வெளியாகும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பொழுதுபோக்கின் நவீன வடிவங்களாக மாறிவிட்டன.

வாழ்க்கையில் நம் எதிர்கொள்ளும் விஷயங்கள் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொண்டதாக  இருப்ப்பதால், அவ்வப்போது சவால்களையும் சந்திக்கும் நாம் சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். இந்த நிம்மதியை நமக்குக் கொடுக்கும் சமூக ஊடகங்களுக்கு நன்றி சொல்லலாம்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்பாதாலேயே அந்த வீடியோக்கள் வைரல் ஆகின்றன.

மேலும் படிக்க | விசுவாசத்தை மட்டுமில்ல, சுறுசுறுப்பையும் குத்தகை எடுத்திருக்கேன்! நாய்க்குட்டி வீடியோ வைரல்

சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்கள் மிக கியூட்டாக மட்டுமல்ல அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு மகிழ்விக்கின்றன. நவீன தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை என்று சொல்லிவிடலாம். 

இணையத்தில் தற்போது பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், பூங்கா ஒன்றில் வைத்திருக்கும் மின்கம்பத்தில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு பூவைப்ப்போல பூத்தால் எப்படி இருக்கும்? வீடியோ வைரலாகும்....

இணையத்தில் வைரலாகும் மின்கம்பம்

இந்த வீடியோவில், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தெருவிளக்கின் டிசைன் மிகவும் அழகாக இருப்பதைப் பார்த்து வியந்து நிற்கும் சிறுமியின் வியப்பு மேலும் அதிகரிக்கும் அளவு ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன தெரியுமா?

மேலும் படிக்க | “என்னது மியாவ் மியாவ்-ஆ?” பூனை போல கத்தும் சிறுத்தை..! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ 

இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகிறது. ஆச்சரியத்தில் மின்கம்பத்தை உயர்ந்து பார்த்தது, மலர் வடிவில் இருக்கும் அந்த மின்கம்பத்தின் உச்சியில் உள்ள வடிவமைப்பு விரிந்து பூவாக மலர்கிறது. இது அந்த குட்டிப் பெண்ணுக்கு ஆச்சரியம் அளிக்க, அவள் மேலும் குஷியாகிறாள். 

உடனே, சற்று தூரத்தில் இருக்கும் மற்றொரு மின்கம்பத்தை நோக்கி ஓடுகிறாள். அங்குள்ள மின்கம்பத்தின் உச்சியில் இருக்கும் மலர் வடிவமைப்பும் விரிகிறது. அங்கு நின்று கொண்டிருக்கும் சிறுமியும் வியக்க, இந்த வியக்கவைக்கும் வீடியோவை பார்க்கும் இணையதள பயனாளிகளும் ஆச்சரியமடைகின்றனர். 

இப்படிப்பட்ட ஜாலி வீடியோக்களைப் பார்த்தால், மனம் மகிழ்ந்து, லேசாகிறது. எனவே, வைரல் வீடியோக்களை தொடர்ந்து பாருங்க, லைக் போடுங்க...

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மெட்ரோவில் ஒலித்த ‘தையா தையா’... ஷாருக்கான் போல் ஆடி இணையத்தை கலக்கிய நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News