Viral Video: திருமணம் மண்டபம் ஆன விமானம்... நடுவானில் கை கோர்த்த காதலர்கள்!

துபாயில் நடந்த ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில், இந்திய ஜோடியான விதி பாப்லி மற்றும் ஹ்ரிதேஷ் சைனானி ஆகியோர் நூதனமான  முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 27, 2023, 05:47 PM IST
  • விமானத்தை திருமண மண்டபமாக மாற்றி நடுவானில் கை பிடித்தனர்.
  • துபாயில் இருந்து ஓமனுக்கு மூன்று மணி நேர பயணம்.
  • பளபளக்கும் லெஹெங்காக்கள் மற்றும் ஸ்டைலான குர்தாக்களில் அலங்கரித்துக் கொண்டிருந்த விருந்தினர்கள்.
Viral Video: திருமணம் மண்டபம் ஆன விமானம்... நடுவானில் கை கோர்த்த காதலர்கள்! title=

துபாயில் நடந்த ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில், இந்திய ஜோடியான விதி பாப்லி மற்றும் ஹ்ரிதேஷ் சைனானி ஆகியோர் நூதனமான  முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.நவம்பர் 24-ம் தேதி போயிங் 747 விமானத்தில் திருமணம் நடைபெற்றது, மணப்பெண்ணின் தந்தையான ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லி தனது மகளின் திருமணத்தை நடுவானில் நடத்த திட்டமிட்டு நடத்தி அசத்தியுள்ளார். நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகப் நண்பர்கள் உட்பட ஏறத்தாழ 350 விருந்தினர்கள், துபாய் தெற்கில் உள்ள ஜெடெக்ஸ் தனியார் முனையத்தில் இந்த அற்புதமான நிகழ்வைக் காண கூடியிருந்தனர். இந்த திருமணத்தை இன்னும் சிறப்பு செய்தது என்னவென்றால், 28 ஆண்டுகளுக்கு முன்பு, விதியின் பெற்றோர் இதே போன்று "வானத்தில் திருமணம்" செய்து கொண்டதன் மூலம் பெரிதும் பேசப்பட்டனர். ஏர் இந்தியா விமானத்தை திருமண மண்டபமாக மாற்றி நடுவானில் கை பிடித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவிலுள்ள நகைகள் மற்றும் வைர விற்பனை நிலையங்களின் மதிப்புமிக்க நெட்வொர்க்கிற்கு பெயர் பெற்ற போப்லி குடும்பம், துபாயில் இருந்து ஓமனுக்கு மூன்று மணி நேர பயணத்தின் போது இந்த அசாதாரணமான 'நடுவானில் திருமணம்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. திருமண வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

பளபளக்கும் லெஹெங்காக்கள் மற்றும் ஸ்டைலான குர்தாக்களில் அலங்கரித்துக் கொண்டிருந்த விருந்தினர்கள், உற்சாகத்தை வெளிப்படுத்தி, புன்னகைத்து, கை அசைத்து, கலகலப்பான பாலிவுட் பாடல்களை பாடி திருவிழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தனர். முன்னதாக மாப்பிளை ஊர்வலம், துபாயில் அல் மக்தூம் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஜெடெக்ஸ் விஐபி முனையத்தை வந்தடைந்தது. பின்னர் திருமணம் செய்து கொள்ள விமானத்தில் ஏறும் முன், விருந்தினர்கள் தங்கள் போர்டிங் பாஸுடன் அந்த அற்புதமான தருணங்களைப் படம்பிடித்தனர், அதன் பிறகு விழா விமானத்தில் நடந்தது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்

திருமண விழாவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த  விமானம் 

திருமண விழாவுக்காக விமானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைவரும் திருமணத்தை கண்டு களிக்கும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறிய ப்ரொஜெக்டர் பொருத்தப்பட்டிருந்தது. விழா நடந்தவுடன், விருந்தினர்கள் விமானத்திலேயே விருந்தை உண்டனர். இதில் உஅய்ர ரக விருந்தாக, காய்கறி ஜால்ஃப்ராஸி, காளான் புலாவ், பாலக் பனீர் மற்றும் தால் மசாலா போன்ற உணவுகள், ரொட்டி மற்றும் வெண்ணெய் ஆகியவை அடங்கும்.

விமானத்தின் உள்ளே  நிலவிய ஒரு கொண்டாட்டம்

விருந்தினர்கள் பிரபலமான ரன்வீர் - பிரியங்கா - அர்ஜுன் சிறப்புப் பாடலான 'துனே மாரி எண்ட்ரியன்' பாடலைப் பாடினர். உற்சாகமான சூழல் தொடர்ந்தது, விருந்தினர்கள் பாலிவுட் ட்யூன்களுக்கு நடனமாடினர், திருமணத்திற்குப் பிந்தைய விருந்துக்கு உற்சாகத்தை அளித்தனர்.

மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News