சீண்டினா சின்னாபின்னாக்கிடுவேன்! ஆக்‌ஷனுக்கு ரியாக்‌ஷன் கொடுக்கும் முதலை வீடியோ

Scary Video Of Crocodile:  கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தை பார்த்திருக்கலாம், கண்ணிமைப்பதற்குள் சீறித் தாக்கி, எதிராளியை பீதியடைய இப்படியொரு வீடியோவை பார்த்திருக்க மாட்டீங்க!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2023, 12:28 PM IST
  • என்னை சீண்டினா சும்மா இருக்க மாட்டேன்!
  • முதலையின் ரியாக்‌ஷன் வீடியோ வைரல்
  • ஆக்‌ஷனுக்கு ரியாக்‌ஷன் கொடுக்கும் முதலை வீடியோ
சீண்டினா சின்னாபின்னாக்கிடுவேன்! ஆக்‌ஷனுக்கு ரியாக்‌ஷன் கொடுக்கும் முதலை வீடியோ title=

சீறும் முதலை வீடியோ: பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல, நாம் என்றுமே நேரில் சென்று பார்க்க முடியாத அல்லது பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன. அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் தகவல்கள் உதவுகின்றன. செய்திகள், கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பலதரப்பட்ட வழிகளிலும் நம்மை வந்து அடையும் எண்ணற்ற செய்திகள், நமக்கு பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கின்றன.

அந்த வகையில், சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இணையம் மூலம் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை கொடுத்தால், அவற்றில் இருந்து நாம் ஆக்கப்பூர்வமான செய்திகளை கிரகித்துக் கொண்டு, மற்றவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மேலும் படிக்க | ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்

ஆக்ரோஷமான விலங்குகளின் கோபமும் சீறலும் மட்டுமல்ல, புத்திசாலித்தனமான வீடியோக்களும் வைரலாகின்றன. கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தை மட்டுமல்ல, கண்ணிமைப்பதற்குள் சீறித் தாக்கி, எதிராளியை பீதியடைய வைக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது. 

ஆக்ரோஷமாய் தாக்கும் முதலை 

தன்னை சீண்டுபவரை கோபத்துடம் தாக்கும் முதலையின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிறது. 

வைரல் வீடியோ தொடங்கும்போது, முதலை நீருக்குள் இருக்கிறது. ஒருவர் அதை நெருங்கி அதன் மேல் ஒரு பொருளை வைக்க முற்படுகிறார். அமைதியாய் இருக்கும் முதலை சில நொடிகளில் ஆக்ரோஷமாகிறது.

மேலும் படிக்க | தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க

திடீரென தண்ணீரில் இருந்து குதித்து உயரும் முதலை, தன்னை சீண்டியவரை நோக்கி பாய்கிறது. இந்த முதலைப் பாய்ச்சலை எதிர்பார்க்காத நபர் அப்படியே பின்பக்கமாக சாய்கிறார். முதலையின் வாயில் அவர் சிக்கிக் கொள்வாரோ என்று வீடியோவை பார்க்கும் நமக்கே பீதி ஏற்படுகிறது.

அதற்குள், மற்றொரு நபர் ஓடி வந்து, முதலையிடம் இருந்து காப்பாற்ற முயல்கிறார். பார்க்கும் நமக்கே பயமாக இருக்கும்போது, அந்த தாக்குதல் நொடி, தாக்கப்பட்டவருக்கு எப்படி இருந்திருக்கும்? பீதியில் ஜன்னி வந்திருக்கும் என தோன்றுகிறது.

இதிலிருந்து தெரிந்துக் கொள்ள வேண்டியது என்ன? சும்மா இருக்கவங்களை சீண்டினா, எப்போதும் அவங்க பேசாம இருக்க மாட்டாங்க.... ஆக்‌ஷனுக்கு ரியாக்‌ஷன் குடுத்த உங்க நிலைமை மோசமாயிரும்....

இதுபோன்ற பல வித்தியாசமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. விலங்குகளில், முதலை, குரங்கு, நாய்க்குட்டி, பூனை, யானை, புலி என எந்த விலங்காக இருந்தாலும் அவற்றின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக ரசித்து பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | உன்னை பிடிக்காம விடமாட்டேன்! கங்கணம் கட்டிக் கொண்டு துரத்தும் பென்குயின்! பல்பு கொடுக்கும் பறவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News