ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்

காவல் நிலையத்தில் கோழிக்கறி சமைத்து ரீல்ஸ் ஆக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இலவன்திட்டா போலீசார், ஓண பண்டிகை கொண்டாடிய வீடியோ செம வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2023, 09:19 PM IST
  • ஓனம் ஸ்பெஷல் போலீஸ் வீடியோ
  • காவல்நிலையத்தில் கொண்டாட்டம்
  • கோழிக்கறி சமைத்த சர்ச்சை ஸ்டேஷன்
ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்  title=

அண்மையில் கோழிக்கறியை வாங்கி வந்து காவல்நிலையத்திலேயே வைத்து சமைத்த காவலர்களின் வீடியோ இணையத்தில் வைரலானது. கேரளாவின் இலவந்திட்டா காவல்நிலையத்தில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. அதாவது காவல்துறையினரின் மன அழுத்ததைக் குறைக்கும் விதமாக நல்ல நோக்கத்தோடு இந்த சமையலை அவர்கள் செய்ய நினைத்திருந்தாலும், காவல்நிலையத்தில் சமையல் செய்து அதனை வீடியோவாக இணையத்தில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையாக மாறியது. ஹோட்டலா? அல்லது காவல்நிலையமா? என்ற கேள்வி எழுந்ததுடன், இப்படி செய்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடும் விமர்சனம் சோஷியல் மீடியாவில் எழுந்தது.

மேலும் படிக்க | பாம்பை கைமா பண்ணத் துடிக்கும் முதலை! உன்னை பிரியாணி போடறேன்! சீறும் பாம்பு

இதனைத் தொடர்ந்து கேரள மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். சிலர் இந்த வீடியோவை நல்ல விதமாகவே பார்த்தனர். காவல்துறையினர் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று ஏதேனும் கட்டுப்பாடு இருக்கிறதா? என ஒரு தரப்பினர் கேட்க, அவர்கள் எங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்? என்பது தான் கேள்வி என்று இன்னொரு தரப்பினர் விமர்ச்சிக்க, வீடியோ எடுத்த காவல்துறையினருக்கு இது சர்ச்சையாக மாறியது. 

அவர்களும் இதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, இப்போது அதே காவல் நிலையத்தில் குடும்பத்துடன் ஓனம் கொண்டாடி வீடியோ வெளியிட்டிருக்கின்றனர் இலவன்திட்டா காவல்துறையினர். கோழிக்கறி சமைத்து சர்ச்சையில் சிக்கிய போலீஸார், பாரம்பரிய ஓனம் பண்டிகை கொண்டாடி சர்ச்சைக்கு பதிலாக இப்போது நல்ல பெயரை பெற்றுள்ளனர். அவர்களின் இந்த கொண்டாட்ட வீடியோவை பலரும் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கோபம் வந்தா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்... கடுமையாய் தாக்கும் புலி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News