தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க

Crocodile Viral Video: தாய்லாந்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒரு பயிற்சியாளரின் கையை முதலை கவ்வி பிடித்து தாக்கிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 28, 2023, 02:29 PM IST
  • இது ட்விட்டரில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 20 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை இது பெற்றுள்ளது.
  • இருப்பினும், பழைய வீடியோ என தெரிகிறது.
தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க title=

Crocodile Viral Video: இந்த பூமி முழுவதும் மிகவும் கொடூரமான மற்றும் ஆபத்தான விலங்குகளை எண்ணத் தொடங்கினால், முதலைகள் சந்தேகத்திற்கு இடமின்றி முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் எனலாம். இந்த ஊர்வன வகை விலங்கு, மிகவும் கொடூரமாக வேட்டையாடுவதில் ஒன்றாகும். மேலும் அவை பெரும்பாலும் குளங்களின் ராஜாக்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. 

வேட்டையாடும்போது அவை இரக்கம் காட்டுவதில்லை, மேலும் அவர்களை சீண்டிப் பார்ப்பது மரணத்தையே அழைப்பதற்கு நிகரானது ஆகும். சமீபத்தில், மிருகக்காட்சி சாலையின் பயிற்சியாளரை முதலை ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், இது வைரலானது நேர்மறையான காரணங்களுக்காக அல்ல. ஒரு திகிலூட்டும் சம்பவத்தில், தாய்லாந்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒரு பயிற்சியாளரை முதலை தாக்கியது, இருப்பினும் தூண்டுதல் இல்லாமல் தாக்கவில்லை.

சியாங் ராயில் உள்ள புகழ்பெற்ற ஃபோக்காதாரா முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிசாலையில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இது முதலை நிகழ்ச்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட இடமாகும். அங்கு பயிற்சியாளர்கள் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக முதலையின் வாயில் தங்கள் தலையையும் கையையும் வைப்பதில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இந்த லைவ் ஷோ ஒன்றின் போது இந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பயங்கரமான காட்சிகளால் குழந்தைகள் உட்பட பார்வையாளர்கள் பயந்து அலறினர்.

மேலும் படிக்க | கோபம் வந்தா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்... கடுமையாய் தாக்கும் புலி வீடியோ வைரல்

இந்த பயங்கர சம்பவத்தை குன் புசாவிட் என்பவர் பதிவு செய்துள்ளார். அவர் தனது மனைவி நோக் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் போக்காதாரா முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிசாலைக்கு சென்றிருந்தார் என கூறப்படுகிறது.

வைரல் வீடியோ:

மிருகக்காட்சிச்சாலையின் பயிற்சியாளர் ஒருவர் தனது கையை முதலையின் வாயில் நுழைத்து படிப்படியாக அதன் தொண்டைக்கு கீழே தள்ளுவதை வீடியோ காட்சிகள் வெளிப்படுத்தின. அவர் மெதுவாக கையை ஆழமாக வற்புறுத்தி உள்ளார். வெளித்தோற்றத்தில் உடனடி தாக்குதலுக்கு ரெடியாக இருந்தார். சில நிமிடங்களில், முதலை சட்டென்று தன் தாடைகளை மூடிக்கொண்டு, அவரது கையைப் பற்றிக்கொண்டது. முதலையின் வாயில் இருந்து கையைப் பிடுங்கி எடுத்தாலும், போராட்டம் இல்லாமல் இல்லை. பயங்கரமான காட்சி அறிவிப்பாளரை இசையை நிறுத்தத் தூண்டியது, மேலும் அவர் அரங்கை விட்டு வேகமாக வெளியேறுவதைக் காண முடிந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், வீடியோ பழையது என கூறப்படுகிறது மற்றும் எந்த தலைப்பும் இல்லாமல் @FAFO_TV என்ற X சமூக வலைதளத்தின் (முன்னர் Twitter என அறியப்பட்டது) பக்கத்தில் மறுபகிர்வு செய்யப்பட்டது. பகிரப்பட்டதில் இருந்து பழைய வீடியோ கிளிப், 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்தது மற்றும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது. திகிலூட்டும் வீடியோ X பயனர்களையும் தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள தூண்டியது. பெரும்பாலான பயனர்கள் மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளரின் தவறு, அவர் முதலையை தாக்குவதற்கு தூண்டியது என்றும், இயற்கையானது உயிரினத்தைத் தாக்குவது அதன் இயல்பு போன்றது என்றும் கமெண்ட் செய்துள்ளனர். சிலர் அந்த பயிற்சியாளரை கேலிக்கும் உள்ளாக்கினர். 

மேலும் படிக்க | 'ஸ்பைடர் மேன் பூனை' ஒரே ஜம்பில் உசரமான சுவற்றை தாண்டிய வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News